;
Athirady Tamil News

பாடசாலை உபகரணங்கள் மீதான வரியை நீக்குக!!m I’m

0

பாடசாலை உபகரணங்கள், விசேட தேவையுடையோருக்கான பொருள்கள் மீது விதிக்கப்பட்டுள்ள வரியை உடனடியாக நீக்க வேண்டுமென பாராளுமன்றத்தில் சுயாதீனமாக இயங்கும் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச நிதி அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தார்.

ஜனவரி மாதம் முதலாந் தவணைக்காகப் பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்பட உள்ளது. இதனால் மாணவர்களுக்கு தேவையான பாடசாலை உபகரணங்களை கொள்வனவு செய்ய வேண்டும். ஆனால், பாடசாலை உபகரணங்கள் மீது விதிக்கப்பட்டுள்ள வரியால் பாடசாலை உபகரணங்களின் விலைகள் மூன்று மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.

அதுபோல, விசேட தேவை உடையோருக்கான பொருள்களை இறக்குமதி செய்வதற்கும் வரிகள் அறவிடப்படுகின்றன. இதனால் நாட்டில் உள்ள 5 இலட்ச விசேட தேவையுடைவர்களும் சிரமங்களுக்கு முகங்கொடுத்து வருகிறார்கள். எனவே பாடசாலை உபகரணங்கள், விசேட தேவை உடையோருக்கான பொருள்கள் மீது விதிக்கப்பட்டுள் வரிகளை நீக்க வேண்டும் என விமல் வீரவன்ச எம்.பி கோரிக்கை விடுத்தார்.

இதேவேளை ஜப்பான் நாட்டுக் கடவுச்சீட்டு உலக அளவில் அங்கீரிக்கப்பட்டுள்ளதால் ஜப்பான் நாட்டுப் பயணிகள் சுற்றுலாவுக்காக இரண்டு நாடுகளுக்கு சென்று மூன்றாவது நாட்டுக்கு செல்லும்போது அவர்களுக்கு வீசாவுக்குக் கட்டணங்கள் அறிவிடப்படுவதில்லை என்றார்.

ஆனால், உலகிலேயே வடகொரியாவும் இலங்கையும் மாத்திரமே ஜப்பான் நாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு விசாக் கட்டணங்களை அறவிடுகின்றன. இலங்கையில் தற்போது விசாக் கட்டணங்களும் அதிகரித்துள்ளன. எனவே இதனை புரிந்துகொண்டு இது தொடர்பில் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இதன்போது குறுக்கீடு செய்து பதிலளித்த நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிடி, பாடசாலை உபகரணங்களுக்கு வரி அறவிடப்படுவதில்லை. ஆனால் டொலரின் விலை அதிகரித்துள்ளதால் இறக்குமதி செய்யப்படும் பொருள்களின் விலைகளும் அதிகரித்துள்ளன. இது நியாயமான விலை அதிகரிப்பே எனவும் தெரிவித்தார்.

மேலும், விசேட தேவையுடையோருக்கு தேவையான பொருள்கள் மீது எந்தவிதமான வரிகளும் அறவிடப்படுவதில்லை எனவும் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.