;
Athirady Tamil News

அடுத்த ஆண்டுக்கான கியூட் முதுகலை தேர்வு ஜூன் 1-ம் தேதி தொடக்கம்..!!

0

நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை, முதுகலை பட்டப்படிப்புகளில் மாணவர்களை சேர்க்க மத்திய பல்கலைக்கழக பொது நுழைவு தேர்வு எனப்படும் (கியூட்) தேர்வை மத்திய அரசு நடத்துகிறது. இந்நிலையில், அடுத்த ஆண்டுக்கான முதுகலை படிப்புக்கான கியூட் தேர்வு தேதியை தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. அதன்படி, அடுத்த ஆண்டு ஜூன் மாதம் 1 முதல் 10-ம் தேதி வரை கியூட் முதுகலை தேர்வுகள் நடைபெறும். இதற்கான விண்ணப்பங்கள் மார்ச் மாதத்தின் இடையில் வழங்கப்படும் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. கியூட் இளங்கலை தேர்வு மே 21-ம் தேதி தொடங்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.