;
Athirady Tamil News

மாதகலில் இருந்து நந்தி கொடியுடன் பாத யாத்திரை! (PHOTOS)

0

அகில இலங்கை சைவ மகா சபையினரால் வருடா வருடம் திருவெம்பாவை விரதத்தை முன்னிட்டு முன்னெடுக்கப்படும் பாதயாத்திரை மாதகல் சம்பில்துறை சம்புநாதஈஸ்வரத்திலிருந்து காரைநகர் ஈழத்து சிதம்பரத்தை நோக்கி இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை காலை 7மணியளவில் ஆரம்பமாகியது.

நந்தி கொடியுடன் அடியவர்கள் சிவனுடைய நாமங்களை உச்சரித்தும் பாராயணம் செய்தும் ,ஆன்மீக கீர்த்தனைகளை பாடிய வண்ணம் பாதயாத்திரையில் ஈடுபட்டனர்.

சாந்தை சிதம்பரேஸ்வரர் ஆலயம், சாந்தை வீரபத்திரர் ஆலயம், பனிப்புலம் முத்துமாரியம்மன் ஆலயம், சுழிபுரம் பறாளாய் பிள்ளையார் முருகன் ஆலயம் , சுழிபுரம் மத்தி கறுத்தனாத்தோட்டம் துர்க்கையம்மன் ஆலயம், சுழிபுரம் மேற்கு ஹரிகர புத்திர ஐயனார் ஆலயம், சுழிபுரம் மேற்கு கதிர்வேலாயத சுவாமிகள் ஆலயம், சுழிபுரம் பெரியபுலோ வைரவர் ஆலயம், மூளாய் வதிரன்புலோ பிள்ளையார் முருகன் ஆலயம் , மூளாய் இராவணேசுவரர் ஆலயம், வலந்தலை மடத்துக்கரை முத்துமாரியம்மன் ஆலயம் ஆகிய திருத்தலங்களை தரிசித்தவாறு காரைநகர் ஈழத்து சிதம்பரத்தை சென்றடைந்து நிறைவுபெற்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.