;
Athirady Tamil News

கடந்த 2021-ம் ஆண்டில் நடைபெற்ற சாலை விபத்துகளில் 1 லட்சம் பேர் மரணம்!!

0

கடந்த 2021-ம் ஆண்டில் நிகழ்ந்த பல்வேறு சாலை விபத்துகளில் 1 லட்சம் பேர் மரணமடைந்துள்ளனர். இதில் பைக், மிதிவண்டிகளில் சென்றவர்கள், பாதசாரிகளும் அடங்குவர். 2017-ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2021-ல் சாலை விபத்துகளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 சதவீதம் உயர்ந்துள்ளதாக சாலைப் போக்குவரத்து அமைச்சகத்தின் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், கார், லாரி மற்றும் மூன்றுசக்கர வாகனங்களில் சென்று உயிரிழந்தோரின் எண்ணிக்கை இந்த காலகட்டத்தில் 31 சதவீதம் குறைந்து 35,253-ஆக இருந்தது.

பாதுகாப்பு வழிமுறைகளை முறையாக கடைப்பிடிக்காததே சாலை விபத்துகளில் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிப்புக்கு முக்கிய காரணமாக உள்ளது. எனவே, அரசுகள் வாகன ஓட்டிகளின் பாதுகாப்பில் கூடுதல் கவனத்தை செலுத்த வேண்டியது அவசியமாகியுள்ளது.

வாகன விற்பனை, சாலை வசதி அதிகரிப்பின் காரணமாக ஆண்டுக்கு ஆண்டு விபத்துகளின் எண்ணிக்கையும் பன்மடங்கு அதிகரித்து வருகிறது. மொத்த உயிரிழப்புகளில் மோட்டார்சைக்கிள், மிதிவண்டி பயன்பாட்டாளர்கள், பாதசாரிகளின் பங்கு 2021-ல் 67 சதவீதமாக உயர்ந்துள்ளது. 2017-ல் இது 49.3 சதவீதமாக மட்டுமே இருந்தது.

பாதசாரிகள், சைக்கிள் ஓட்டுபவர்களைப் பொருத்தவரை அவர்கள் சிரமமின்றி பாதுகாப்பான பாதையில் செல்ல போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் அதிக உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.