;
Athirady Tamil News

உள்ளூராட்சி தேர்தல் – கூட்டமைப்பின் நிலைப்பாடு வெளியானது !!

0

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் கோரப்படவுள்ள நிலையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகள் தனித்து போட்டியிடுவதா அல்லது ஒன்றிணைந்து போட்டியிடுவதா என்பது தொடர்பில் இதுவரை இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படவில்லையென கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் கூறினார்.

மட்டக்களப்பில் எதிர்வரும் 7 ஆம் திகதி இடம்பெறவுள்ள இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் இறுதி தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளதாக யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், உள்ளூராட்சி சபைத் தேர்தல் வேட்புமனுத் தாக்களுக்கான திகதி தேர்தல் ஆணைக்குழுவினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

எமது கட்சியின் சார்பிலே தேர்தல்கள் பிற்போடகூடாது, அது ஜனநாயகத்தினை மீறுகின்ற செயல் என தொடர்ச்சியாக கூறி வந்திருக்கிறோம்.

அரசாங்கம் இந்தத் தேர்தலினை பிற்போடுவதற்கு எடுத்த முயற்சிகள் எங்களுக்கு தெரியும். எதுவும் கைகூடாத நிலைமையில் தேர்தல் ஆணைக்குழு சட்ட ரீதியாக அறிவித்துள்ளது.

இந்த வேளையில், இதனைத் தடுப்பதற்கு சில முயற்சிகள் நடக்கக் கூடும். அவ்வாறு முயற்சிகள் எடுக்கப்படுமிடத்து உடனடியாக நாங்கள் நீதிமன்றத்தினை நாடி சட்டத்தின் அடிப்படையில் தேர்தல் நடத்துவதற்கான எங்களுடைய முழுமையான அழுத்தத்தினை கொடுப்போம்.

சில வருடங்களாக நடத்தப்படாமல் இருக்கின்ற மாகாண சபை தேர்தலும் உடனடியாக நடத்தப்பட வேண்டும். மாகாண சபைகள் இயங்காமல் இருப்பது என்பது மிகவும் பாரிய பின்னடைவு.

இலங்கை தமிழரசுக்கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பினை பொறுத்தவரையில், எங்களின் மூலக்கிளையில், இருந்து இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கான விண்ணப்பதாரிகளை முன்வருமாறு கோரியிருக்கிறோம்.

இந்தத் தடவை சரியானவர்களையும், இளைஞர்களையும்,யுவதிகளையும் இந்தத் தேர்தலில் முன் நிறுத்துவோம். மக்களின் ஆதரவினை நாங்கள் எதிர்பார்க்கின்றோம்” – என்றார்.

தமிழ் தேசிய கட்சிகளின் தலைவர்கள் சமகால நிலைமை தொடர்பாக சந்திப்பு!! (படங்கள்)

தமிழரசுக் கட்சி தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து பிரிந்து தனியாக செல்வதை நாம் விரும்பவில்லை! – பா.கஜதீபன்!!

இனப்பிரச்சினைக்கான தீர்வில் அனைத்து இன மக்களும் திருப்தியடையும் தீர்வையே ஏற்போம் – எம்.ஏ.சுமந்திரன்!!

இந்தியாவின் பாதுகாப்பிற்கு குந்தகம் ஏற்படுகின்ற விடயங்கள் இருந்தால் நாங்கள் எதிர்ப்போம் – எம்.ஏ.சுமந்திரன்!! (படங்கள், வீடியோ)

தமிழ் மக்களுடைய பசியில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பசியாறக்கூடாது!!

ஐ.நா. அதிகாரிகளுடன் கூட்டமைப்பு சந்திப்பு!!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக இணைந்து முடிவு எடுப்பதே தமிழ் மக்களுக்கு பயன் தரும் – த. சித்தார்த்தன்!! (வீடியோ)

You might also like

Leave A Reply

Your email address will not be published.