;
Athirady Tamil News

எம்.ஜி.ஆர். சிலைக்கு 17-ந்தேதி எடப்பாடி பழனிசாமி மரியாதை !!

0

அ.தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- அ.தி.மு.க. நிறுவனத் தலைவர் எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்தநாளான 17.1.2023 – செவ்வாய்கிழமை காலை 10.30 மணிக்கு, சென்னை, ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலை, தலைமைக் கழகம்-புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகை வளாகத்தில் அமைந்துள்ள, புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். உருவச் சிலைக்கு, அ.தி.மு.க. இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தி, அ.தி.மு.க. கொடியினை ஏற்றி வைத்து இனிப்பு வழங்க உள்ளார்.

அதனைத் தொடர்ந்து, தலைமைக் கழகச் செயலாளர்கள் மலர்தூவி மரியாதை செலுத்த உள்ளனர். அ.தி.மு.க.வினர் தங்கள் பகுதிகளில் நிறுவப்பட்டுள்ள எம்.ஜி.ஆர். உருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்தும், ஆங்காங்கே எம்.ஜி.ஆருடைய உருவப் படங்களை வைத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்துமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.