;
Athirady Tamil News

விலைமதிப்பற்ற உயிர்களை இழந்துவிட்டோம்… நேபாள விமான விபத்து குறித்து மோடி வேதனை!!

0

நேபாளத்தில் இன்று 68 பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் 4 பேர் என மொத்தம் 72 பேருடன் பொக்காரா விமான நிலையத்திற்கு வந்த எட்டி ஏர்லைன்ஸ் விமானம் தரையிறங்குவதற்கு சற்று நேரத்திற்கு முன்னதாக திடீரென தீப்பற்றி விபத்துக்குள்ளானது.

விமானம் தரையிறங்குவதற்கு விமான நிலையத்தை நெருங்கியபோது, சேதி ஆற்றின் கரையில் உள்ள பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளாகியிருக்கிறது. மீட்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. 68 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மற்றவர்களை தேடும் பணி நடைபெறுகிறது. நேபாளத்தை உலுக்கி உள்ள இந்த விபத்தைத் தொடர்ந்து நாளை ஒருநாள் தேசிய துக்க தினம் அனுசரிக்கப்படுகிறது.

விமான விபத்து பற்றி கேள்விப்பட்டதும் இந்திய பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். “நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர விமான விபத்தில் இந்தியர்கள் உட்பட விலைமதிப்பற்ற உயிர்கள் பலியாகியிருப்பது வேதனை அளிக்கிறது” என பிரதமர் மோடி கூறி உள்ளார். விமானத்தில் பயணித்த 72 நபர்களில் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் 5 பேர் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.