;
Athirady Tamil News

கோப்பாய் ஆசிரிய கலாசாலையின் பொங்கல் விழா!! (PHOTOS)

0

கோப்பாய் ஆசிரிய கலாசாலையின் பொங்கல் விழா 16.01.2023 கலாசாலை முற்றத்தில் கலாசாலை நுண்கலை மன்ற ஏற்பாட்டில் நடைபெற்றது.

கலாசாலை அதிபர் ச. லலீசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வாழ்நாள் பேராசிரியரும் யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்க பெருந் தலைவருமாகிய பேராசிரியர் அ. சண்முகதாஸ் மற்றும் முனைவர் மனோன்மணி சண்முகதாஸ் ஆகியோர் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டனர். பொங்கல் செயற்பாடும் அதற்கான விளக்கங்களும் என்ற பொருளில் முனைவர் மனோன்மணி சண்முகதாஸ் செயன்முறை ரீதியாக ஆசிரிய மாணவர்களுக்கு விளக்கவுரை வழங்கினார்

கலாசாலையின் முன்னாள் அதிபர் வீ. கருணலிங்கம் , யாழ்ப்பாணம் தேசிய கல்வியியல் கல்லூரி பீடாதிபதி சு. பரமானந்தம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

நுண்கலை மன்ற காப்பாளர் ரஜிதா சின்னத்துரை வாழ்த்துரை வழங்கினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.