;
Athirady Tamil News

புங்குடுதீவு சித்திவிநாயகரில் மாணவர் கௌரவிப்பு நிகழ்வும் , பொங்கல் விழாவும்!! ( படங்கள் இணைப்பு )

0

யா/ புங்குடுதீவு இறுப்பிட்டி சித்திவிநாயகர் மகாவித்தியாலமானது 1914.01.18ம் நாள் உயர்திரு வேலாயுதம் விஸ்வலிங்கம் அவர்களினால் ஸ்தாபிக்கப்பட்டு நேற்றைய தினத்துடன் 109ம் ஆண்டை எட்டியுள்ளது. இதனை முன்னிட்டு
பாடசாலை சமூகத்தினரால் 18-01-2023 அன்று பொங்கல் விழாவும், க.பொ.த (சாதாரண) தரத்தில் சித்தியெய்திய மாணவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்வில் சூழகம் அமைப்பின் செயலாளரும் , மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி அறப்பணி மையத்தின் தீவக இணைப்பாளருமான திரு. கருணாகரன் நாவலன் பிரதம விருந்தினராக கலந்துகொண்டிருந்தார் . சிறப்பு விருந்தினராக பாடசாலையின் நிறுவுனரின் பேரனாகிய யாழ்ப்பாணம் திடீர் மரண விசாரணை அதிகாரி திரு. ந பிரேம்குமார் கலந்து கொண்டிருந்தார் . மேற்படி பொங்கல் விழா மேல்மருத்தூர் ஆதிபராசக்தி அறப்பணி மையத்தின் அனுசரணையில் நடைபெற்றது. இதனை மேல்மருத்தூர் ஆதிபராசக்தி அறப்பணி மையத்தின் தீவக ஒருங்கிணைப்பாளர் திரு .க. நாவலன் ஒழுங்கமைத்திருந்தார். அதேவேளை சூழலியல் மேம்பாட்டு அமைவனத்தின் ( சூழகம் ) அனுசரணையில் மாணவர் கௌரவிப்பு நிகழ்வும் நடைபெற்றிருந்தது.
தகவல்.. திரு.குணாளன் புங்குடுதீவு.

You might also like

Leave A Reply

Your email address will not be published.