;
Athirady Tamil News

யாழ். மாநகர முதல்வர் தெரிவுக் கூட்ட ஒத்திவைப்பு நியாயமற்றது : உள்ளூராட்சி ஆணையாளருக்கு எதிராக உறுப்பினர்கள் ஆட்சேபனை!! (PHOTOS)

0

யாழ். மாநகர சபைக்கான இடைக்கால முதல்வர் தெரிவில் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் நியாயமற்ற வித த்தில் நடந்து கொண்டுள்ளார் என்று குற்றஞ்சாட்டியுள்ள யாழ். மாநகர சபை உறுப்பினர்கள் 20 பேர், உள்ளூராட்சி ஆணையாளர் தன் தவறை நிவர்த்தி செய்யத் தவறினால் சட்ட நடவடிக்கைக்குச் செல்லவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

யாழ். யாழ். மாநகர சபைக்கான இடைக்கால முதல்வர் தெரிவுக்கான கூட்டம் இன்று, 19 ஆம் திகதி காலை 10 மணிக்கு இடம்பெற்ற போது கூட்டத்துக்கான கோரம் இல்லாத காரணத்தினால் ஒத்திவைக்கப்பட்டது.

இந்த ஒத்திவைப்பு முறையற்றது என ஆட்சேபித்து இன்றைய கூட்டத்தில் பங்குபற்றிய 20 உறுப்பினர்கள் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளருக்குக் கடிதம் ஒன்றினை அனுப்பி வைத்துள்ளனர். கடிதத்தின் பிரதிகள் வடக்கு மாகாண ஆளுநருக்கும், யாழ். மாநகர சபையின் செயலாளருக்கும் அனுப்பப்பட்டுள்ளன.

அந்தக் கடிதத்தின் முழு விபரமும் வருமாறு :

2012 ஆம் ஆண்டு 22 ஆம் இலக்க உள்ளூர் அதிசார சபைகள் தேர்தல்கள் (திருத்தச்) சட்டத்தின் 66(எ) பிரிவின் கீழ், 09-01-2023 திகதியிடப்பட்ட கடிதத்தின் பிரகாரம் தங்களால் கூட்டப்பட்ட யாழ் மாநகர சபை முதல்வர் தெரிவுக் கூட்டம் முறையற்ற விதத்தில் முடிவுறுத்தப்பட்டமைக்கான எமது ஆட்சேபணையைத் தெரிவித்துக்கொள்கிறேம். கூட்டம் ஆரம்பிக்கப்பட்ட நேரத்தில் 24 பேர் கலந்து கொண்டிருந்தனர். “கூட்டத்தில் 24 உறுப்பினர்கள் கலந்து கொண்டிருப்பதனால் – தேவையான நிறைவெண் இருப்பதனால் கூட்டம் ஆரம்பிக்கப்படுகிறது’ எனத் தெரிவித்திருந்நீர்கள், அத்துடன் முதல்வர் தெரிவுக்கான முன்மொழிவைக் கோரினீர்கள்.

முதல்வராக எமது கட்சியின் உறுப்பினர் கௌரவ இ. ஆனோல்ட் அவர்களின் பெயர் முன்மொழியப்பட்ட பின், வேறேதும் முன்மொழிவுகள் இல்லாத நிலையில் முதல்வராக கௌரவ இம்மானுவல் ஆனோல்ட் அவர்கள் தெரிவாகும் ஏது நிலை காணப்பட்டது. இந்த நேரத்தில் முன்மொழிவை ஆட்சேபித்து தாம் வெளியேறுவதாக, சபையின் நான்கு உறுப்பினர்கள் வெளியேறினர்.

அந்த நேரத்தில் சட்ட ஏற்பாடுகளுக்குப் புறம்பாக தாங்கள் கூடத்தை ஒத்திவைப்பதாக அறிவித்தீர்கள். இது நியாமற்ற ஒரு அறிவிப்பு என உடனடியாகவே சபையில் எம்மால் ஆட்சேபனை பதிவு செய்யப்பட்டது. எனினும், எமது கோரிக்கையைக் கணக் கெடுக்காமல் தாங்கள் கூட்டத்தை இடைநிறுத்திவிட்டு, சபை மண்டபத்திலிருந்து வெளியேறினீர்கள்.

கூட்டம் ஆரம்பிக்கப்பட்ட நேரத்தில் தேவையான கோரம் இருந்த போதிலும், தெரிவுக்காக வேறு முன்மொழிவு இல்லாத கரணத்தினாலும், நான்கு உறப்பினர்களின் வெளியேற்றம் காரணமாக கோரமில்லை என்று எந்தவொரு உறுப்பினரும் ஆட்சேபனையும் தெரிவிக்காத காரணத்தினால் முன்மொழியப்பட்டபடி கௌரவ உறுப்பினர் இம்மானுவல் ஆனஸ்ட் அவர்களை முதல்வராக ஏகமனதாக அறிவிக்கப்பட்டிருப்பதே பொருத்தமானதென நாங்கள் கருதுகிறோம்.

எனவே இது தொடர்பாகத் தாங்கள் இழைத்த தவறை நிவர்த்தி செய்யத் தவறுவீர்களாயின் நாம் சட்ட நடவடிக்கையை நாடுவதற்கு நிர்ப்பந்திக்கப்படுவோம் என்பதைத் தங்களுக்கு அறியத் தருகிறோம்.“ என்றுள்ளது.

 

யாழ். மாநகர முதல்வரைத் தெரிவு செய்யும் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.!!

யாழ்ப்பாணம் மாநகர சபையின் முதல்வரைத் தெரிவு செய்வதற்கான கூட்டம்!! (படங்கள்)

யாழ் மாநகர சபைக்கு மீண்டும் முதல்வர் தெரிவு இடம்பெறவுள்ளது.!!

யாழ் மாநகர சபைக்கு இனி மேயர் தேர்வு இடம்பெறாது – வெளியாகிய அதிரடி அறிவித்தல்!!

யாழ். மாநகரத்தின் அடுத்த முதல்வர் யார் ? தமிழரசுக்குள் நீடிக்கும் குழப்பம்!!

யாழ்.மாநகர சபை உறுப்பினர்களுக்கு ஆளுநர் அழைப்பு!!

You might also like

Leave A Reply

Your email address will not be published.