;
Athirady Tamil News

நியூஸி. பிரதமர் ஜெசிந்தா ராஜினாமா முடிவு செய்திக்கு தரக்குறைவான தலைப்பு: மன்னிப்புக் கோரிய பிபிசி!!

0

நியூஸிலாந்து நாட்டின் பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் அடுத்த மாதம் தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக வியாழன் அன்று தெரிவித்தார். அதனை உலக செய்தி நிறுவனங்கள் செய்தியாக வெளியிட்டன. உலக அளவில் கவனம் பெற்ற செய்தி நிறுவனமான பிபிசியும் இது குறித்து செய்தி வெளியிட்டது. ஆனால், அது பாலியல் பாகுபாட்டுடன் கூடிய தரக் குறைவான தலைப்பை வைத்து சர்ச்சையில் சிக்கியது.

இந்நிலையில், இந்த விவகாரத்தில் பிபிசி தரப்பு மன்னிப்பு கோரியுள்ளது. “Can women have it all?” என்ற தலைப்பில் முதலில் செய்தி வெளியிட்டது பிபிசி. பெண்களால் எல்லாம் முடியுமா என்பதை குறிக்கும் விதமாக இந்தத் தலைப்பு இருந்தது. இது சமூக வலைதளத்தில் கவனம் பெற்றது.

அதே நேரத்தில் கடந்த ஆண்டு பதவி விலகிய பிரிட்டனின் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் உட்பட ஆடவர் அரசியல் தலைவர்களின் செய்தி கவரேஜ் குறித்து ஒப்பிட்டு சிலர் கருத்து தெரிவித்திருந்தனர். மேலும், பெண்கள் மீதான வெறுப்புணர்வை பிபிசி வெளிப்படுத்துகிறது எனவும் சொல்லி இருந்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.