;
Athirady Tamil News

வாய் துர்நாற்றத்தினால் அவதிபடுகின்றீர்களா? (மருத்துவம்)

0

வாய் துர்நாற்றத்தால் மற்றவர்களிடம் முகம் கொடுத்து கதைப்பதற்கு பெரிதும் கஷ்டப்படுகின்றீர்களா? அல்லது நீங்கள் பேசும் போது அவர்கள் முகத்தை திருப்பிக் கொள்வதால் நீங்கள் அவமானமடைந்தது போல உணர்கின்றீர்களா? கவலையை விடுங்கள். நீங்கள் மற்றவர்களிடம் மனம் விரும்பியது போல முகம் பார்த்து கதைப்பதற்கும், அவர்கள் உங்கள் பேச்சை தாராளமாக கேட்டு ரசிப்பதற்குமான காலம் வெகு தொலைவில் இல்லை.

அதற்கு முதலில் வாயில் துர்நாற்றம் ஏற்படுவதற்கான காரணங்களை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அந்த வகையில் வயிற்றில் ஏற்படும் புண்கள் தான் அதற்கு முதலாவது காரணமாக விளங்குகின்றது. ஆமாம் அல்சர் எனப்படும் இவ்வயிற்றுப் புண்களால் வயிற்றில் உருவாகும் நாற்றத்தன்மை வாய் வழியாக வெளியேறும் போது தான் வாய் துர்நாற்றம் அதிகம் ஏற்படுகின்றது.

அத்துடன் கீழ் வரும் சில விடயங்களும் வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்துவதில் முக்கிய இடத்தைப் பிடிக்கின்றன.

உடம்பில் நீர்ச்சத்து குறைந்து போகின்றமை.
புகையிலை, வெற்றிலை, பாக்கு போன்றவற்றை வாயிற்குள் போட்டு மெல்லுதல்.
புகைக்கும் பழக்கம்.
போதைப் பொருட்களை சாப்பிடுதல்.
தொண்டையில் உள்ள டான்சில் எனப்படும் சுரப்பியல் தொற்று ஏற்படுதல். இவ்வாறு தொண்டையில் உருவாகும் கிருமித் தொற்றும் வாய் துர்நாற்றத்திற்கு மிக முக்கிய காரணமாக அமைகின்றது.
சிலருக்கு ஒரு வழி பாதையான உணவுக்குழாயினூடாக உணவு பையிலிருந்து அமிலங்கள் மேல் நோக்கி வந்து போகும். Re-Fix எனப்படும் இச்செயற்பாட்டினாலும் வாயில் துர்நாற்றம் ஏற்படுகின்றது.
உணவு குழாயினூடாக உணவு மண்டலத்திற்கு சென்ற உணவு சுமார் 4 மணித்தியாலத்தில் செறிமானம் அடைய வேண்டும். நான்கு மணித்தியாலத்திற்கு மேல் உணவு செறிமானம் அடையாமல் இருக்கும் போது அதிலிருந்து வெளிப்படும் புளிச்ச நாற்றம் வாய் வலியாகவே வெளியேறும் அதுவும் வாயில் துர்நாற்றம் ஏற்படுவதற்கு காரணமாக அமைகின்றது. இதனையே அஜீரணக்கோளாறு என்கின்றோம்.

இவ்வாறு பல்வேறு வழிமுறைகளின் மூலம் வாயில் ஏற்படும் துர்நாற்றத்தை எப்படி இலகுவாக போக்கி கொள்ளலாம் என்பதை இனி பார்ப்போம்.

உடனடி நிவாரணி எனும் போது வாசனைப் பொருட்களான கராம்பு, கொத்தமல்லி இலை என்பவற்றை வாயில் போட்டு மெல்லுதல்.
குடற் புண்னை போக்குவதற்காக காலையில் எழுந்தவுடன் காப்பிக்குப் பதிலாக தினமும் 4 டம்பளர் சுத்தமான நீரை அருந்த வேண்டும்.
அரை லீற்றர் நீரில் புதினா சாறு, எலுமிச்சை சாறு ஆகியவற்றை சம அளவில் கலந்து வாயை கொப்பளிப்பதுடன் தினமும் அவற்றை அருந்தி வருவதன் மூலமும் வாய் துர்நாற்றத்தைப் போக்க முடியும். அதனுடன் உப்பு சிறிதளவை சேர்த்துக் கொள்வதன் மூலம் பயனை இரட்டிப்பாக்கிவிட முடியும்.
அத்துடன் காலை மாலை என இரண்டு நேரமும் பற்களை நன்றாக துலக்கிக் கொள்ள வேண்டும். அத்துடன் பல் இடுக்குகளில் தேங்கி விடும் உணவு துகல்களை அகற்றி மாதம் ஒரு தடவையேனும் பல் வைத்தியரிடம் காட்டி சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.
சாப்பிட்டப் பின் வாயை நன்றாக கொப்பளித்து சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.
புகைப்பழக்கம் உள்ளிட்ட போதைப் பொருட்களை வாயில் போட்டு மெல்வதை முற்றாக தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
அதிகமான காரம் மற்றும் புளிப்புச் சுவையுள்ள உணவுகளை சாப்பிடுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
வாய் சுகாதாரத்தில் அதிக அக்கரை எடுத்துக் கொள்ள வேண்டும்.

இவ்வாறான விடயங்களை கடைப்பிடிப்பதன் மூலம் நீங்கள் வாய் திறந்தாலே தூர ஓடும் உங்கள் அன்புக்குரியவர்களை உங்கள் அருகிலேயே அமரச் செய்து விட முடியும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.