;
Athirady Tamil News

நடிகர் விஜயின் ரசிகர் சடலமாக மீட்பு!!

0

நடிகர் விஜயின் முகத்தை பச்சையாக குத்தியிருக்கும் 25 வயதுதக்க இளைஞர் ஒருவர், நீலாங்கரை கடற்கரையில் சடலமாக மிதந்து இறந்து கிடந்துள்ளார்.

சென்னை கிழக்கு கடற்கரை சாலை, நீலாங்கரை அருகே கபாலீஸ்வரர் நகர் கடற்கரையில் 25 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர், இறந்த நிலையில் சடலமாக கடல் அலையில் மிதந்து வந்துள்ளார். இதனை கண்ட பொதுமக்கள் நீலாங்கரை பொலிசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின் பேரில் பொலிசார் சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, இராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கடல் அலையில் அடித்து வரபட்ட இளைஞரின் உடலில் நடிகர் விஜயின் முகம் பச்சை குத்தப்பட்டுள்ளது.

யார் இந்த இளைஞர் என்ற விவரம் தெரியாததால் காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.