;
Athirady Tamil News

பேரணியில் கலந்து கொள்வோருக்கு வடக்கில் இருந்து பேருந்து வசதி!!

0

வடக்கிலிருந்து கிழக்கு நோக்கிய எழுச்சிப் பேரணியின் நிறைவு நாள் நிகழ்வு எதிர்வரும் 7 ஆம் திகதி, செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பில் இடம்பெறவுள்ள நிலையில் பேரணியில் வடக்கு மாகாணத்தில் இருந்து கலந்து கொள்பவர்களுக்குரிய பேருந்து ஒழுங்குகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் அழகராசா விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

அது தொடர்பில் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

“இலங்கையின் சுதந்திர நாள் – தமிழர்களுக்குக் கரிநாள்” என்ற தொனிப் பொருளில், தமிழர்களின் அபிலாசைகளான சுயநிர்ணயம், தமிழ்த் தேசியம், மரபுவழித் தாயகம் ஆகியவற்றைச் சர்வதேச சமூகத்துக்கு வெளிப்படுத்தும் வகையில் வடக்கில் இருந்து கிழக்கு நோக்கி இடம்பெறும் எழுச்சிப் பேரணியின் நிறைவு நாள் நிகழ்வு எதிர்வரும் 7 ஆம் திகதி, செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பில் இடம்பெறவுள்ளது.

அந்த எழுச்சி நிகழ்வுக்கு வடக்கு மாகாணத்தில் இருந்து கலந்து கொள்பவர்களுக்குரிய பேருந்து ஒழுங்குகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

நாளைய தினம் திங்கட்கிழமை, மாலை 6 மணிக்கு யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் இருந்தும், கிளிநொச்சி – பரந்தன் பேருந்து நிலையம் மற்றும் கிளிநொச்சி – புதிய பேருந்து நிலையத்திலிருந்தும், முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் பேருந்து நிலையங்களிலிருந்தும் பேருந்துகள் செல்லவுள்ளன.

அந்தந்த மாவட்டங்களில் இருந்து செல்லவுள்ளோர் அருகிலுள்ள பேருந்து புறப்படும் இடங்களுக்குக் குறித்த நேரத்துக்குச் சென்று பேருந்தில் தங்களது பயணத்தை தொடர முடியும்.

மேலதிக விபரங்கள் தேவைப்படுவோர் 0774819490 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும் என செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

தமிழ்த் தேசிய மக்கள்முன்னணியின் எதிர்ப்பு பேரணி!! (PHOTOS)

யாழ். பல்கலை முன்றலில் காலை 10.30 மணிக்கு ஆரம்பமான பேரணி!! (படங்கள்)

சுதந்திர தினத்தில் யாழ்.பல்கலையில் கறுப்பு கொடி!! (PHOTOS)

யாழில்.பூரண ஹர்த்தால் …!! (PHOTOS)

வடக்கு கிழக்கு மாகாணங்களில் ஹர்த்தாலுக்கு அழைப்பு!!

சுதந்திர தினத்தை புறக்கணிக்க TNA தீர்மானம்!!

வெறுமனே சோற்றுக்காகப் போராடும் இனம் நாமல்ல என்பதை நிரூபிக்க வெண்டும்!!

You might also like

Leave A Reply

Your email address will not be published.