;
Athirady Tamil News

ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள்-5 ஆயிரம் பேருக்கு அன்னதானம்!!

0

பிறந்தநாளையொட்டி ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் 5 ஆயிரம் பேருக்கு அன்னதானத்தை அரசு கொறடா ஏ.கே.டி.ஆறுமுகம் நாளை வழங்குகிறார். புதுவை அரசு கொறடாவும், இந்திராநகர் தொகுதி எம்.எல்.ஏ.வுமான ஏ.கே.டி.ஆறுமுகம் பிறந்தநாளை ஒவ்வொரு ஆண்டும் அவரது ஆதரவாளர்கள் மற்றும் என்.ஆர்.காங்கிரசார் சிறப்பாக கொண்டாடி வருகிறார்கள். அதுபோல் நாளை அரசு கொறடா ஏ.கே.டி.ஆறுமுகம் பிறந்தநாளையொட்டி அவரது ஆதரவாளர்கள் மற்றும் என்.ஆர்.காங்கிரசார் பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளனர். ஏ.கே.டி.ஆறுமுகம் பிறந்தநாளையொட்டி தனது பெற்றோர் உருவபடத்துக்கு மாலை அணிவித்து ஆசி பெறுகிறார்.

இதனைதொடர்ந்து அவரது ஆதரவாளர்கள் ஏ.கே.டி.ஆறுமுகம் எம்.எல்.ஏ. நீடூழி வாழவேண்டி புதுவை மணக்குள விநாயகர் கோவிலில் 6.30 மணிக்கு சிறப்பு அபிஷேகம் செய்து தங்க தேர் இழுக்கிறார்கள். இதனை தொடர்ந்து 7 மணிக்கு சித்தானந்தா கோவிலில் சிறப்பு அபிஷேகம் செய்யப்படுகிறது. தொடர்ந்து பூத்துறையில் உள்ள மனநல காப்பகத்தில் மனநலம் குன்றியவர்களுக்கு காலை உணவு மற்றும் புத்தாடைகள் வழங்குகின்றனர். இதன் பின்னர் திரவுபதியம்மன் கோவில், முத்திரையர்பாளையம் செங்கழுநீரம்மன் கோவில், சாணரப்பேட்டை கோவிலில் சிறப்பு அபிஷேகம் செய்து கேக் வெட்டி அன்னதானம் வழங்கப்படுகிறது.

இதனைதொடர்ந்து என்.ஆர்.காங்கிரஸ் 13-ம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை புதுவை வழுதாவூர் சாலை கோவிந்தபேட்டை-முத்திரையர்பாளையம் பகுதியில் உள்ள இந்திராநகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் முதல்-அமைச்சர் ரங்கசாமி முன்னிலையில் ஏ.கே.டி. ஆறுமுகம் எம்.எல்.ஏ. கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடுகிறார். விழாவில் சபாநாயகர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், என்.ஆர்.காங்கிரஸ் நிர்வாகிகள், அரசியல் பிரமுகர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் இந்திராநகர் தொகுதி மக்கள் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவிக்கின்றனர்.

பிறந்தநாளையொட்டி இந்திராநகர் தொகுதியை சேர்ந்த ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளும், 5 ஆயிரம் பேருக்கு அன்னதானமும் ஏ.கே.டி.ஆறுமுகம் எம்.எல்.ஏ. வழங்குகிறார். இரவு 7.30 மணிக்கு தந்தை பெரியார் நகரில் வக்ரதுண்ட விநாயகர் கோவிலில் அறங்காவலர் குழு சார்பில் நடைபெறும் சிறப்பு பூஜையில் ஏ.கே.டி.ஆறுமுகம் எம்.எல்.ஏ. பங்கேற்கிறார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.