;
Athirady Tamil News

சிறப்புற இடம்பெற்ற கோப்பாய் ஆசிரிய கலாசாலை ஆசிரிய மாணவர்களுக்கான வீதியோட்டம்!! (படங்கள்)

0

கோப்பாய் ஆசிரிய கலாசாலை ஆசிரிய மாணவர்களுக்கான வீதியோட்ட நிகழ்ச்சி 03.03.2023 வெள்ளி காலை நடைபெற்றது

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலாசாலையின் முன்னாள் அதிபர் வே.க. கணபதிப்பிள்ளையும் சிறப்பு விருந்தினர்களாக யாழ்ப்பாணம் தேசிய கல்வியியல் கல்லூரி பீடாதிபதி திரு எஸ் பரமானந்தம் கலாசாலையின் முன்னாள் அதிபர் வீ கருணலிங்கம் லயன் டாக்டர் வி. தியாகராஜா முன்னாள் விரிவுரையாளர் திரு வி. எஸ். குணசீலன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

ஆண் ஆசிரிய மாணவர்கள் கலாசாலை முன்றிலில் இருந்து புறப்பட்டு இராச வீதி வழியாக நல்லூர் கோவிலை அடைந்து பருத்தித்துறை வீதி வழியாக இருபாலை சந்தியை அடைந்து கலாசாலையை வந்தடைந்தனர்.

பெண்ஆசிரிய மாணவர்கள் கலாசாலை முன்றிலிருந்து புறப்பட்டு இராஜ வீதி வழியாக இராமசாமி பரிகாரி சந்தியை அடைந்து ஆடியபாதம் வீதி வழியாக கல்வியங்காட்டு சந்தியை அடைந்து பருத்தித்துறை வீதி வழியாக இருபாலை சந்தியை அடைந்து கலாசாலை வாயிலை வந்தடைந்தனர்.

நாற்பது வயதுக்கும் ஐம்பது வயதுக்கும் இடைப்பட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆசிரிய மாணவர்கள் இவ்வீதியோட்டத்தில் பங்கேற்றமையை பலரும் பாராட்டி வாழ்த்தினர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.