;
Athirady Tamil News

யாழ்ப்பாணத்தில்போதைப் பொருளுடன் ஒருவர் கைது!!

0

யாழ்ப்பாணத்தில் போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்த ஒருவர் கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோண்டாவிலைச் சேர்ந்த 25 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் விசாரணைகளின் பின் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளார்.

இதேவேளை, 4 கிலோ கிராம் கஞ்சா போதைப் பொருளுடன் ஒருவர் கொடிகாமம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

எழுதுமட்டுவாழ் பகுதியில் வைத்து கொடிகாமம் பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய சந்தேக நபரே கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.