;
Athirady Tamil News

ஐநா மனித உரிமை பேரவையின் தீர்மானம் -மீண்டும் நிராகரித்தது இலங்கை!!

0

ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவை கடந்த வருடம்நிறைவேற்றிய தீர்மானத்தை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என இலங்கை மீண்டும்தெரிவித்துள்ளது.

ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் 52 அமர்வில்இடம்பெற்ற கூட்டமொன்றின் போது ஜெனீவாவில் உள்ளஇலங்கையின் ஐநாவிற்கான அலுவலகத்தின் நிரந்தர வதிவிடப்பிரதிநிதி ஹிமாலிஅருணதிலக இதனை தெரிவித்துள்ளார்.

மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்ட்டவை போன்ற தீர்மானங்கள்இலங்கை மக்களிற்கு உதவியாக அமையப்போவதில்லை மாறாக நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கத்திற்கு அவை பாதிப்பை ஏற்படுத்தும் எனஅவர் தெரிவித்துள்ளார்.

ஐநாவின் உறுப்பு நாடுகளிடம் பற்றாக்குறையாக உள்ள வளங்களை வீணாக்கும் நடவடிக்கை இது என தெரிவித்துள்ள ஹிமாலி அருணதிலக இந்த வளங்களை வேறு நோக்கங்களிற்காக பயன்படுத்தலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-9764465884326249

You might also like

Leave A Reply

Your email address will not be published.