;
Athirady Tamil News

தலைதூக்கும் ரஷ்யா ஆக்கிரமிப்புகள் – உக்ரைனிய படையின் அதிர்ச்சி தகவல் !!

0

உக்ரைனின் மிக முக்கிய நகரமான பாக்மூட் நகரத்தைக் கைப்பற்ற ரஷ்யா ஆக்கிரமிப்பை ஆரம்பித்துள்ளதால் உக்ரைனிய படைகள் பின்வாங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

உக்ரைனின் தலைநகரமான கெய்வ் நகரம் ரஷ்யா உக்ரைனிய போரின் வெற்றிச் சின்னமாக கூறப்பட்டிருந்த நிலை மாற்றப்பட்டுள்ளது.

இதன் காரணமாக பாக்மூட் நகரை மிக தீவிரமாகப் பாதுகாக்க உக்ரைனிய படைகள் போராடி வருகின்றன.

ஆனால் உப்பு சுரங்க நகரத்தின் கட்டுப்பாட்டைத் தக்கவைக்கப் போராடும் உக்ரேனியப் படைகள், ரஷ்யாவால் கைப்பற்றப்படுவது தவிர்க்க முடியாதது என்று பத்திரிக்கையாளர்களிடம் கூறிய சில பிரிவுகள் ஏற்கனவே பின்வாங்கத் தொடங்கிவிட்டதாகவும் கூறியுள்ளது.

அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் லாயிட் ஆஸ்டின் ஏற்கனவே உக்ரேனிய பின்வாங்கலின் முக்கியத்துவத்தைக் குறைத்து மதிப்பிட்டுள்ளார்.

ஜோர்டான் பயணத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஜெனரல் ஆஸ்டின், “இந்த சண்டையின் அலைமாறிவிட்டது என்று அர்த்தம் இல்லை. என அவர் கூறியதாக அமெரிக்க பத்திரிக்கை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் உக்ரைனியர்கள் [பக்முட்டின் மேற்கில்] தங்கள் பாதுகாப்புப் படையை மாற்றியமைக்க முடிவு செய்தால், நான் அதைப் பின்னடைவாகப் பார்க்க மாட்டேன்.” என கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கடந்த திங்களன்று உயர் தளபதிகளின் சந்திப்பின் போது , தற்காப்பு நடவடிக்கையைத் தொடரவும், பக்முட்டில் எங்கள் நிலைகளை மேலும் வலுப்படுத்தவும்” விரும்புவதாகக் கூறியுள்ளார்.

உக்ரேனிய அதிபரின் உதவியாளர், நகரத்தை தொடர்ந்து பாதுகாப்பதன் அவசியம் குறித்து இராணுவத்திற்குள் ஒருமித்த கருத்து காணப்படுகிறது என தெரிவித்தார்.

மேலும், “பக்முட்டிற்கு மேற்கே 10 கிமீ தொலைவில் உள்ள சாசிவ் யார் நகருக்கு அருகில், உக்ரைனிய இராணுவ வீரர் ஒருவர் மாத சண்டைக்குப் பிறகுத் தனது பீரங்கியைச் சரிசெய்ய வந்ததார்.

“பக்முத் ஆக்கிரமிக்கப்படும், நாங்கள் சுற்றி வளைக்கப்பட்டுள்ளோம். ” என்று அவர் வாகனத்திலிருந்து பத்திரிக்கையாளர்களிடம் கூறிவிட்டுச் சென்றுள்ளார். இதனிடையே ரஷ்யப் படைகள் கிட்டதட்ட பக்முட் நகரத்தை சூழ்ந்திருக்கும் தகவல் தெரிய வந்துள்ளது. ” என தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.