சீனா-ரஷ்யா உறவின் மர்மம் – ரஷ்யாவிற்கு இழப்பை உண்டாக்கும் முயற்சியில் உக்ரைன் !!

உக்ரைன் மற்றும் ரஷ்யாவிற்கு இடையேயான போரில் பக்முட் மற்றும் டொனெட்ஸ்கில் நகரங்களைப் பாதுகாத்துப் போரிடுவதன் மூலம் ரஷ்யாவிற்குக் கடுமையான இழப்பை உண்டாக்கலாம் எனத் உக்ரைன் திட்டமிட்டுச் செயல்படத் துவங்கியுள்ளது.
உக்ரைன் மற்றும் ரஷ்யாவிற்கு இடையே கடந்த ஒரு வருட காலமாகப் போர் நடைபெற்று வருகிறது. இப்போரில் அந்நாட்டு மக்கள் பெரும் இன்னல்களைச் சந்தித்து வருகின்றனர்.
தங்கள் வசிப்பிடங்களை இழந்த மக்கள் தங்களது வாழ்வாதாரத்தைத் தொலைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் ரஷ்யா, உக்ரைன் நாட்டின் முக்கிய நகரமான பக்முட்டை கிட்ட தட்ட தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டது.
பக்முட்டை பாதுகாக்க இராணுவப் படைகள் கடுமையான பாதுகாப்பு அரணை உருவாக்க வேண்டுமென அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கூறியுள்ளார். மேலும் டொனெட்ஸ்கி நகரத்தைப் பாதுகாப்பதன் மூலம் ரஷ்யாவிற்குப் பெரிய அளவு இழப்பை உண்டாக்கலாம் எனக் கூறியுள்ளார்.
பக்முட்டில் சண்டை சுமார் ஏழு மாதங்களாக நடந்து வருகிறது. ரஷ்யப் படைகள் மற்றும் வாக்னர் குழுவின் கூலிப்படை பிரிவுகள் சமீபமாக மெதுவாக முன்னேறி வருகின்றன. அவர்கள் இப்போது நகரின் வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கே மூன்று பக்கங்களிலும் உள்ள பகுதிகளை ஆக்கிரமித்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.
ரஷ்யப் படைகள் நகரின் பெரும்பகுதியைச் சுற்றி வளைத்துள்ளது என்றாலும் நகரின் அனைத்துப் பகுதிகளையும் கட்டுப்படுத்தவில்லை. ஆனால் உக்ரேனியரின் கட்டுப்பாட்டில் உள்ள விநியோக வழிகள் மட்டுப்படுத்தப்பட்டதாகவும் ஆபத்தில் இருப்பதாகவும் பாதுகாப்பு ஆய்வில் தெரிய வந்துள்ளது.
பல ஆயிரக்கணக்கான மக்கள் இன்னும் நகரத்தில் வாழ்கின்றனர். நகரம் முழுதும் இடிபாடுகளுக்குள் சிக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
உக்ரைன் நாட்டின் மீதான படையெடுப்புக்கு முன்பு ரஷ்யா மற்றும் உக்ரைன் நாட்டுக்கு இடையேயான ஏற்றுமதி உலகளாவிய தானிய ஏற்றுமதியில் கிட்டத்தட்ட கால் பங்கைக் கொண்டிருந்தன.
உக்ரைனில் நடக்கும் போருக்கான ஆயுதங்களை ரஷ்யாவிற்கு சீனா வழங்குவதை இன்னும் அமெரிக்கா கவனிக்கவில்லை என்றும், சீன அதிபர் பெய்ஜிங் அவ்வாறு செய்ய முடிவு செய்தால், அமெரிக்கா அதற்கு தக்க பதிலடி நடவடிக்கைகளை தறுவது பற்றி பேச மறுத்துவிட்டதாகவும் தெரியவந்துள்ளது.
“சீனாவிற்கு இங்கே ஒரு தேர்வு உள்ளது,” என்று தேசிய பாதுகாப்பு சபை செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி ஏதேனும் ஆயுத பரிமாற்றங்கள் நடைபெறுவது குறித்து கேட்டபோது கூறியுள்ளார்.
இந்த வாரம் வாஷிங்டனுக்கு வரும் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கும் ஐரோப்பிய ஆணைய உருப்பினருமான உர்சுலா வான் டெர் லேயனுக்கும் இடையில் கூடுதல் தடைகள் நடவடிக்கைகள் விவாதமாக இருக்கும் என்று கிர்பி கூறியுள்ளார்.
அமெரிக்காவும் அதன் மேற்கத்திய நட்பு நாடுகளும் சீனா ரஷ்யாவுக்கு உதவுவதால் ” புடின் அப்பாவி உக்ரேனியர்களைக் கொல்வதை தடுக்காமல் இருக்காது.” என்று நம்புவதாக அவர் கூறியுள்ளார்.