;
Athirady Tamil News

முழு சொத்தும் மகள்களுக்கு கிடைக்க மறுமணம் செய்த முஸ்லீம் தம்பதிக்கு சமூக வலைதளங்கள் மூலம் மிரட்டல்- வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு!!

0

கேரள மாநிலம் கோழிக்கோட்டை அடுத்த காஞ்சாங்காட்டை சேர்ந்தவர் சுக்கூர். வக்கீல். இவரது மனைவி ஷீனா. முஸ்லிம் தம்பதியான இவர்கள் ஷரியத் சட்டப்படி திருமணம் செய்து கொண்டனர். இச்சட்டப்படி பெற்றோரின் முழு சொத்தும் அவர்களின் மகள்களுக்கு கிடைக்காது. சுக்கூர்-ஷீனா தம்பதிக்கு 3 மகள்கள் மட்டுமே உள்ளனர். இதனால் அவர்கள் தங்களின் சொத்துக்கள் அனைத்தும் மகள்களுக்கே கிடைக்க வேண்டும் என்று விரும்பினர்.

இதற்காக கடந்த 8-ந் தேதி மகளிர் தினத்தன்று சிறப்பு திருமண சட்டப்படி மறுமணம் செய்ய முடிவு செய்தனர். சுக்கூர்-ஷீனா தம்பதியின் மறுமணம் சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுதியது. பல்வேறு அமைப்பினர் இதற்கு பாராட்டு தெரிவித்தனர். இந்நிலையில் சிலர் சுக்கூர்-ஷீனா தம்பதிக்கு மிரட்டல் விடுக்கவும் செய்தனர்.

செல்போன் மூலமும், சமூக வலைதளங்கள் மூலமாகவும் இத்தம்பதிக்கு மிரட்டல்கள் வந்தன. இது பற்றி தகவல் அறிந்ததும் காஞ்சாங்காடு போலீசார் சுக்கூர்-ஷீனா தம்பதியின் வீட்டுக்கு சென்று விசாரித்தனர். மேலும் அவர்களின் வீடு முன்பு 2 போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டனர். போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருப்பது சங்கடமாக இருப்பதாக சுக்கூர்-ஷீனா தம்பதியினர் தெரிவித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.