;
Athirady Tamil News

எனக்கு தெரியாமல் உறவினர்கள் பெயரில் சொத்துகள் மாற்றம்- ZOHO நிறுவன சி.இ.ஒ மீது மனைவி பரபரப்பு குற்றச்சாட்டு!!

0

உலகின் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான ஜோஹோ (ZOHO) நிறுவனத்தின் சி.இ.ஓ ஸ்ரீதர் வேம்பு. அவர் கலிபோர்னியாவில் வசித்து வருகிறார். இவருக்கும் இவரது மனைவி பிரமிளாவிற்கும் விவாகரத்து ஆனது. இந்நிலையில், ஜோஹோ நிறுவன சி.இ.ஒ ஸ்ரீதர் வேம்பு, ஆட்டிசம் குறைபாடு உடைய மகனையும், தன்னையும் 2020ம் ஆண்டு நிர்கதியாக விட்டுச் சென்றுவிட்டதாக அவரது மனைவி பிரமிளா குற்றச்சாட்டி உள்ளார்.

மேலும், கலிபோர்னியாவில் தன்னுடன் வாழ்ந்த காலத்திலேயே ஜோஹோ நிறுவனத்தில் அவர் பெயரில் இருந்த பங்குகள் மற்றும் அறிவுசார் சொத்துகளை தனக்கு தெரியாமலேயே அவரது சகோதரி, சகோதரியின் கணவர் பெயருக்கு மாற்றிவிட்டதாகவும், விவாகரத்துக்கு பிறகு தனக்கு சொத்தில் சரிபாதியை ஜீவனாம்சம் கொடுக்க வேண்டும் என்ற நிலையை தவிர்க்வே ஸ்ரீதர் வேம்பு இவ்வாறு செய்ததாக பிரமிளா குற்றம்சாட்டியுள்ளார்.

இந்தியா திரும்பிய பிறகு ஸ்ரீதர் வேம்பு ஒரு முறை கூட என்னையும், மகனையும் பார்க்க வரவில்லை என்றும் அவர் கூறினார். கலிபோர்னியாவில் சட்டப்படி மனைவியின் ஒப்புதல் இல்லாமல் கணவர், சொத்துகளை விற்க முடியாது. ஆனால், வேம்பு அவரது உறவினர்கள் பெயர்களில் சொத்துகளை மாற்றி, மனைவி பிரமிளாவையும் அவரது மகனையும் நிர்கதியாக விட்டுச் சென்றுவிட்டதாக பிரமிளா சார்பில் வழக்கறிஞர்கள் வாதாடியுள்ளனர். ஜோஹோ சிஇஒ மீது அவரது மனைவி பிரமிளா விடுத்த குற்றச்சாட்டு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.