;
Athirady Tamil News

புதிய ஃபைண்ட் N2 ஃப்ளிப் இந்திய விலையை அறிவித்த ஒப்போ!!

0

ஒப்போ நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்திய சந்தையில் தனது ஃபைண்ட் N2 ஃப்ளிப் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் விலையை அறிவித்து இருக்கிறது. முதற்கட்டமாக சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட ஒப்போ ஃபைண்ட் N2 ஃப்ளிப் சமீபத்தில் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த வரிசையில் தான், தற்போது ஒப்போ ஃபைண்ட் N2 ஃப்ளிப் இந்திய விலை அறிவிக்கப்பட்டு இருக்கிறது. புதிய ஒப்போ ஃபைண்ட் N2 ஃப்ளிப் மாடல் சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி Z ஃப்ளிப் 4 போன்றே காட்சியளிக்கிறது. சாம்சங் மற்றும் ஒப்போ என இரு நிறுவன ஃப்ளிப் ஸ்மார்ட்போன்களும் கிளாம்ஷெல் போன்ற டிசைன் கொண்டிருக்கின்றன.

ஃபைண்ட் N2 ஃப்ளிப் மாடலில் 3.26 இன்ச் கவர் டிஸ்ப்ளே, AMOLED ஸ்கிரீன், செல்ஃபி மிரர் போன்ற அம்சங்கள் உள்ளன. விலை விவரங்கள்: ஒப்போ ஃபைண்ட் N2 ஃப்ளிப் ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 89 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் விற்பனை ப்ளிப்கார்ட் மற்றும் ஒப்போ இந்தியா ஸ்டோரில் நடைபெற இருக்கிறது. ஒப்போ ஃபைண்ட் N2 ஃப்ளிப் ஸ்மார்ட்போன் பர்பில் மற்றும் பிளாக் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இந்திய சந்தையில் புதிய ஒப்போ ஃபைண்ட் N2 ஃப்ளிப் ஸ்மார்ட்போனின் விற்பனை மார்ச் 17 ஆம் தேதி துவங்குகிறது.

இந்த ஸ்மார்ட்போனை வாங்குவோர் எஸ் வங்கி, ஐசிஐசிஐ, கோடக் வங்கி, எஸ்பிஐ, ஹெச்டிஎப்சி மற்றும் முன்னணி வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது 10 சதவீதம் அதிகபட்சம் ரூ. 5 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இத்துடன் அதிகபட்சம் 12 மாதங்கள் வரை வட்டியில்லா மாத தவணை முறை வசதியும் வழங்கப்படுகிறது. இவைதவிர ஒப்போ வாடிக்கையாளர்களுக்கு கூடுதலாக எக்சேன்ஜ் அல்லது லாயல்டி போனஸ் ரூ. 5 ஆயிரம் வரை வழங்கப்படுகிறது.

ஒப்போ ஃபைண்ட் N2 ஃப்ளிப் அம்சங்கள்: 6.8 இன்ச் FHD+ டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட் 3.26 இன்ச் கவர் AMOLED டிஸ்ப்ளே, 60Hz ரிப்ரெஷ் ரேட் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 மீடியாடெக் டிமென்சிட்டி 9000 பிளஸ் பிராசஸர் 8 ஜிபி ரேம் 256 ஜிபி மெமரி 50MP பிரைமரி கேமரா இரண்டாவது கேமரா லென்ஸ் 32MP செல்ஃபி கேமரா பக்கவாட்டில் கைரேகை சென்சார் 4ஜி, வைபை, ப்ளூடூத் யுஎஸ்பி டைப் சி போர்ட் 4300 எம்ஏஹெச் பேட்டரி 44 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி

You might also like

Leave A Reply

Your email address will not be published.