;
Athirady Tamil News

ஸ்மார்ட்போனுக்கு ரூ.17 ஆயிரம் தள்ளுபடி – ப்ளிப்கார்ட் சிறப்பு விற்பனை தேதி அறிவிப்பு!!

0

ப்ளிப்கார்ட் வலைத்தளத்தில் மற்றும் ஓர் சிறப்பு விற்பனை “பிக் சேவிங்ஸ் டேஸ் சேல்” பெயரில் நடைபெற இருக்கிறது. மார்ச் 11 ஆம் தேதி துவங்க இருக்கும் சிறப்பு விற்பனை மார்ச் 15 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. எனினும், ப்ளிப்கார்ட் பிளஸ் பயனர்கள் மார்ச் 10 ஆம் தேதியை சிறப்பு விற்பனையில் பொருட்களை வாங்கிட முடியும். சிறப்பு விற்பனையில் வழங்கப்பட இருக்கும் முழு சலுகை விவரங்கள் இதுவரை அறிவிக்கப்படவில்லை. எனினும், எந்தெந்த மாடல்களுக்கு சலுகைகள் வழங்கப்பட உள்ளது என்ற டீசர் வெளியாகி இருக்கிறது. அதில் ஐபோன் 14 மற்றும் ஐபோன் 14 பிளஸ் மாடல்கள் ரூ. 70 ஆயிரத்திற்கும் குறைந்த விலையில் கிடைக்கும் என தெரியவந்துள்ளது. கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட சில மாடல்களுக்கும் அசத்தலான சலுகைகள் வழங்கப்பட உள்ளன.

புதிதாக ஐபோன் வாங்க திட்டமிடுவோர் இந்த சிறப்பு விற்பனையை பயன்படுத்திக் கொள்ளலாம். ஐபோன் மட்டுமின்றி பிக்சல் 6a ஸ்மார்ட்போன் ரூ. 26 ஆயிரத்து 999 விலையிலும், பிக்சல் 7 ப்ரோ மற்றும் பிக்சல் 7 மாடல்கள் முறையே ரூ. 67 ஆயிரத்து 999 மற்றும் ரூ. 46 ஆயிரத்து 999 விலையில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. முன்னதாக பிக்சல் 7 ப்ரோ மற்றும் பிக்சல் 7 ஸ்மார்ட்போன்கள் முறையே ரூ. 84 ஆயிரத்து 999 மற்றும் ரூ. 59 ஆயிரத்து 999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. நத்திங் போன் (1) மாடலின் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் ரூ. 25 ஆயிரத்து விலையில் விற்பனை செய்யப்பட உள்ளது. இதே போன்று ரெட்மி நோட் 12 ப்ரோ பிளஸ் மாடல் தள்ளுபடி செய்யப்பட்ட விலையில் கிடைக்கும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.