;
Athirady Tamil News

வாட்ஸ்அப் அழைப்புகளில் புதிய வசதி – இனி அந்த தொல்லை இருக்காது!!

0

வாட்ஸ்அப் செயலியில் உங்களுக்கு அறிமுகம் இல்லாத எண்களில் இருந்து வரும் அழைப்புகள் தொந்தரவாக இருக்கின்றதா? விரைவில், வாட்ஸ்அப் இந்த தொந்தரவை சரிசெய்யும் வசதியை வழங்க இருக்கிறது. உங்களது வாட்ஸ்அப் காண்டாக்ட்-இல் இல்லாத எண்களில் இருந்து வரும் அழைப்புகளை மியூட் செய்யும் வசதி வழங்கப்படுகிறது. மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப் “Silence Unknown Callers” எனும் பெயரில் புதிய அம்சத்தை வழங்க இருக்கிறது. இந்த அம்சம் கொண்டு பயனர்கள் தெரியாத அல்லது மொபைலில் சேமிக்காத எண்களில் இருந்து வரும் அழைப்புகளை மியூட் செய்யலாம்.

இதுகுறித்து wabetainfo வெளியிட்டு இருக்கும் தகவல்களில் இந்த அம்சம் ஆண்ட்ராய்டு வெர்ஷனில் சோதனை செய்யப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது. விரைவில், இது டெஸ்டிங்-கிற்கு வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம். இந்த அம்சம் வெளியாகும் பட்சத்தில், பயனர்கள் தங்களுக்கு அறிமுகமில்லா எண்களில் இருந்து வரும் அழைப்புகளை மியூட் செய்து அவற்றை தவிர்க்க முடியும். எனினும், மியூட் செய்த பின்பும் அழைப்பு வந்ததை தெரிவிக்கும் நோட்டிபிகேஷன் இடம்பெற்று இருக்கும். புதிய அம்சம் மூலம் பயனர்கள் Spam அழைப்புகளை தவிர்க்க வாட்ஸ்அப் கால் நோட்டிபிகேஷன் அனைத்தையும் மியூட் செய்ய வேண்டிய அவசியம் இருக்காது.

இதுதவிர வாட்ஸ்அப் செயலியில் ஸ்ப்லிட் ஸ்கிரீன் அம்சமும் சோதனை செய்யப்பட்டு வருகிறது. இதை கொண்டு பயனர்கள் ஸ்கிரீனை இரண்டாக பிரித்து, ஒன்றில் சாட் விண்டோ மற்றொன்றில் ஸ்டேட்ஸ் பார், கால்ஸ் என இதர வாட்ஸ்அப் அம்சங்களை ஒரே சமயத்தில் பயன்படுத்தலாம். இந்த அம்சம் வாட்ஸ்அப் செயலியின் டேப்லெட் வெர்ஷனில் வழங்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.