;
Athirady Tamil News

தெல்லிப்பளையில் தேசியமட்ட உதைபந்தாட்ட போட்டித்தொடர்!! ( படங்கள் இணைப்பு )

0

தெல்லிப்பளையில் தேசியமட்ட உதைபந்தாட்ட போட்டித்தொடர் ( படங்கள் இணைப்பு )

இனவாத நோக்கில் செயற்பட்ட நடுவரின் தீர்மானத்தினால் அரையிறுதி வாய்ப்பினை நூலிலையில் தவறவிட்டது புங்குடுதீவு மத்திய கல்லூரி .

இலங்கை பாடசாலைகள் கால்பந்தாட்ட சங்கத்தினரின் ஏற்பாட்டில் தெல்லிப்பளை மகாஜனா கல்லூரியில் இலங்கையின் முன்னணி பெண்கள் பாடசாலை உதைபந்தாட்ட அணிகளுக்கிடையிலான சுற்றுப்போட்டித்தொடர் தற்போது நடைபெற்றுவருகின்றது . மேற்படி பத்து பாடசாலைகளில் ஐந்து சிங்கள மொழி மூல பாடசாலைகளும் , ஐந்து தமிழ் மொழி மூலப்பாடசாலைகளும் பங்கேற்றுள்ளன . தீவகம் சார்பில் ஒரேயொரு அணியாக புங்குடுதீவு மத்திய கல்லூரி அணி பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது .

நடப்பு தேசிய சாம்பியன் அணியாகிய தெல்லிப்பளை மகாஜனாவுடனான போட்டியில் தோல்வியுற்றபோதிலும் அளவெட்டி அருணோதயா கல்லூரியை புங்குடுதீவு மத்திய கல்லூரி தோற்கடித்ததோடு அநுராதபுர பாடசாலையுடனான போட்டியை 0 -0 என்றவாறு சமநிலையில் முடித்துக்கொண்டது . மகஜனா கல்லூரி இத்தொடரில் மூன்று போட்டிகளை வெற்றிகொண்டமையினால் அக்கல்லூரி அரையிறுதி போட்டிக்கு தகுதிபெற்றிருந்த நிலையில் புங்குடுதீவு மத்திய கல்லூரிக்கும் கம்பளை சென் ஜோன்ஸ் பாடசாலைக்குமிடையில் மாலை 5 மணியளவில் போட்டி நடைபெற்றது . இப்போட்டியில் சமநிலை பெற்றாலோ அல்லது வெற்றி அடைந்தாலோ அரையிறுதிக்கு நேரடியாக தகுதிபெறும் வாய்ப்பினை புங்குடுதீவு மத்திய கல்லூரி கொண்டிருந்தது.

ஆனாலும் போட்டி ஆரம்பமாகிய சில நிமிடங்களில் சிங்கள பெரும்பான்மை இனத்தை சேர்ந்த மத்தியஸ்தரின் தவறான முடிவினால் பெனால்டி ( தண்ட உதை ) வழங்கப்பட்டதால் 1- 0 என்றவாறு கம்பளை பாடசாலை அணி முன்னிலை பெற்றிருந்தது . நடுவரின் இத்தீர்ப்பு தவறானதென்றும் பக்கச்சார்பானதென்றும் புங்குடுதீவு மத்திய கல்லூரி அணி மாத்திரமன்றி மைதானத்தில் குழுமியிருந்த ஏனைய பாடசாலைகள் , ஆதரவாளர்கள் கூறியிருந்தபோதிலும் போட்டி ஏற்பாட்டுக்குழுவினரால் அக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டது . ஆனாலும் சளைத்திடாத புங்குடுதீவு மத்திய கல்லூரி பெண்கள் அணியினர் தொடர்ச்சியான தாக்குதல்களை மேற்கொண்டு எதிரணியின் கோல்காப்பினை முழுமையாக ஆக்கிரமித்திருந்தனர். இதனால் கம்பளை பாடசாலை அணியினர் புங்குடுதீவு மத்திய கல்லூரி வீராங்கனைகளை மிகமோசமான முறையில் கால் ,கைகளால் தாக்கி விளையாடியிருந்தனர்.

கம்பளை பாடசாலை அணியினர் றகர் ( ரக்பி ) விளையாடுவது போன்று கால்பந்தாட்டம் ஆடுவதாக மைதானத்தை சூழ குழுமியிருந்தவர்கள் கூச்சலிட்டதையும் அவதானிக்கமுடிந்தது . ஆனாலும் அந்த அணிக்கு எதிராக நடுவரினால் ஒரு எச்சரிக்கையேனும் விடுக்கப்படவில்லை . இறுதிவரை சளைக்காது போராடிய புங்குடுதீவு மத்திய கல்லூரி அணி 1- 0 என்றவாறு தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறியது . புங்குடுதீவு மத்திய கல்லூரி அணிக்கான போக்குவரத்து , மதிய உணவு , குளிர்பான அனுசரணையை சூழலியல் மேம்பாட்டு அமைவனம் ( சூழகம் ) வழங்கியிருந்தது.
தகவல்.. திரு.குணாளன் புங்குடுதீவு.

You might also like

Leave A Reply

Your email address will not be published.