;
Athirady Tamil News

அவங்க பூர்வீகம் ரஷ்யா, அவங்களை அங்கேயே திருப்பி அனுப்பனும் – ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் சர்ச்சை பேச்சு!!!

0

பீகார் மாநிலத்தின் சுபவுல் பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் யதுவன்ஷ் குமார் யாதவ் பேசிய கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. சொந்த கட்சியினரிடையே பேசும் போது, டிஎன்ஏ டெஸ்ட்-இல் பிராமின்களின் பூர்விகம் ரஷ்யா மற்றும் இதர ஐரோப்பிய நாடுகள் என்றும் இந்தியா இல்லை என்பதும் தெரியவந்துள்ளது. இத்துடன் பிராமின்கள் நம்மிடையே பிரிவினை ஏற்படுத்தி நம்மை ஆள முயற்சி செய்கின்றனர் என்று அவர் தெரிவித்தார். மக்கள் பிராமின்களை அவர்கள் இருக்க வேண்டிய இடத்திற்கே அனுப்ப வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார். “டிஎன்ஏ பரிசோதனையில் பிராமின்கள் இந்த நாட்டை சேர்ந்தவர்கள் இல்லை என்று தெரியவந்துள்ளது. அவர்கள் ரஷ்ய பூர்விகம் கொண்டவர்கள் ஆவர்.

தற்போது அவர்கள் இங்கு செட்டில் ஆகிவிட்டனர். பிராமின்கள் நம்மை பிரித்து ஆட்சி செய்ய முயற்சித்து வருகின்றனர். நாம் அவர்களை இங்கிருந்து துரத்த வேண்டும்,” என்று ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் யதுவன்ஷ் குமார் யாதவ் தெரிவித்தார். ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவரின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. “ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவரின் கருத்துக்கள் மிகவும் மோசமானதாக இருக்கிறது. பரசுராம் ரஷ்யா அல்லது வேறு ஏதேனும் நாட்டில் இருந்து வந்துள்ளாரா? ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர்களின் இதுபோன்ற மோசமான கருத்துக்கள் வீண் விளம்பரத்திற்காக தெரிவிக்கப்படுகின்றன. இதுபோன்ற கருத்துக்களுக்கு கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்.

இதுபோன்ற கருத்துக்கள் மஹாகத்பந்தன் பெயருக்கு கலங்கம் ஏற்படுத்துகிறது,” என்று ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் கூட்டணியில் இருக்கும் ஜனதா தளம் கட்சியின் செய்தி தொடர்பாளர் அபிஷேக் குமார் ஜா தெரிவித்துள்ளார். “ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி தலைவரின் மனநிலை சீராக இல்லை என்றே நான் நினைக்கிறேன். இதே கட்சியை சேர்ந்த மனோஜ் குமார் ஜா மற்றும் ஜனதா தளம் கட்சி தலைவர் சஞ்சய் ஜா பிராமின்களின் பூர்விகம் பற்றி விளக்கமளிக்க வேண்டும்,” என்று பாஜக சட்டமன்ற உறுப்பினர் தெரிவித்து இருக்கிறார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.