;
Athirady Tamil News

தினசரி பாதிப்பு தொடர்ந்து குறைகிறது- புதிதாக 1,223 பேருக்கு கொரோனா!!

0

இந்தியாவில் புதிதாக 1,223 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 10-ந்தேதி பாதிப்பு 2,109 ஆக இருந்தது. மறுநாள் 1,690 ஆகவும், நேற்று 1,580 ஆகவும் குறைந்த நிலையில் இன்றும் பாதிப்பு சரிந்துள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 49 லட்சத்து 79 ஆயிரத்து 402 ஆக உயர்ந்துள்ளது.

தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 2,720 பேர் உள்பட இதுவரை 4 கோடியே 44 லட்சத்து 31 ஆயிரத்து 137 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 16,498 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தொற்று பாதிப்பால் நேற்று 11 பேர், கேரளாவில் விடுபட்ட 3 மரணங்கள் என மேலும் 14 பேர் இறந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 5 லட்சத்து 31 ஆயிரத்து 767 ஆக உயர்ந்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.