மதுவுக்காக அதிகாரிகள் மீது தாக்குதல்!!

பொலவத்த வென்னப்புவ புகையிரத நிலையத்திற்குள் மது அருந்த அனுமதிக்காத புகையிரத நிலைய அதிகாரி மற்றும் ஊழியர்களைத் தாக்கிய மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புகையிரத நிலையத்திற்குள் மது அருந்திய அந்த நபர்களை, அதிகாரிகள் புகையிரத நிலையத்திலிருந்து வெளியேறுமாறு தெரிவித்துள்ளனர். அப்போது குறித்த குழுவிலிருந்த நபர் ஒருவர் கத்தியைக் காட்டி அவர்களை மிரட்டியதோடு தாக்குதல் நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
காயமடைந்த ரயில்வே ஊழியர்களும் அதிகாரியும் நீர்கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பொலவத்த மற்றும் மிரிசங்கொட்டுவ பிரதேசங்களைச் சேர்ந்த 34 தொடக்கம் 45 வயதுக்கு இடைப்பட்ட மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர்கள் மாரவில நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.