;
Athirady Tamil News

சபரிமலைக்கு பொருள்கள் கொண்டு செல்ல பம்பையில் இருந்து சன்னிதானம் வரை கேபிள் கார் அமைக்க ஒப்பந்தம்!!

0

கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவில் உள்ளது. இக்கோவிலில் நடைபெறும் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு திருவிழாக்களின் போது லட்சக்கணக்கில் பக்தர்கள் வருவார்கள். இதனால் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்ய கோவிலின் அடிவாரமான பம்பையில் இருந்து பொருள்கள் டிராக்டர் மூலம் கோவிலுக்கு கொண்டு செல்லப்படும். இந்த டிராக்டர்கள் மலைப்பாதையில் செல்லும்போது சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதோடு, பக்தர்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டு வந்தது. எனவே பம்பையில் இருந்து சன்னிதானம் வரை கோவிலுக்கு தேவையான பொருள்களை கேபிள் கார் மூலம் கொண்டு செல்ல தேவசம்போர்டு திட்டமிட்டது.

இது தொடர்பாக கொல்கத்தாவில் உள்ள ஒரு நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து கேபிள் கார் அமைக்க அரசின் சுற்றுச்சூழல் அனுமதி கோரப்பட்டது. சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் ஒப்புதல் கிடைத்ததும் கேபிள் கார் அமைக்கும் பணிகள் உடனடியாக தொடங்கும். இதற்கான மண் ஆய்வு பணியும் தொடங்க உள்ளது. இந்த பணி முடிந்ததும் கேபிள் கார் அமைக்கும் பணிகள் உடனடியாக தொடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.