;
Athirady Tamil News

வீட்டில் தனியாக இருந்த சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபர்- கல்லால் அடித்து கொலை!!வீட்டில் தனியாக இருந்த சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபர்- கல்லால் அடித்து கொலை!!

0

ஆந்திர மாநிலம், அன்னமய்யா மாவட்டம் ராய் சோட்டி, பசவலாவாண்ட்ல பள்ளியை சேர்ந்தவர் உத்தண்ணா (வயது 40). இவர் ஏற்கனவே வழக்கு ஒன்றில் ஜெயிலில் அடைக்கப்பட்டார். கடந்த வாரம் வெளியே வந்தார். அங்குள்ள ஒரு வீட்டில் பெற்றோர் வேலைக்கு சென்றதால் 14 வயது சிறுமி மட்டும் தனியாக இருந்தார். இதனை அறிந்த உத்தண்ணா அவரது வீட்டிள் நுழைந்தார். சிறுமியை பலாத்காரம் செய்ய முயற்சி செய்தார். இதனை சற்றும் எதிர்பாராத சிறுமி கத்தி கூச்சலிட்டார். சிறுமியின் அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். உத்தண்ணா சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்றதை கண்டு ஆத்திரம் அடைந்தனர்.

பொதுமக்கள் உத்தண்ணாவை மடக்கி பிடிக்க முயன்றனர். அவர்களை தாக்கி விட்டு உத்தண்ணா தப்பி ஓடினார். இருப்பினும் அவரை விரட்டிச் சென்ற பொதுமக்கள் முத்தண்ணா மீது சரமாலியாக கற்களை வீசி தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். இது குறித்து தகவல் அறிந்த ராய் சோட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். உத்தண்ணா பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.