புதிய பாஸ்போர்ட்டுக்கு தடையில்லா சான்றிதழ் – ராகுல் காந்தி வழக்கு வெள்ளிக்கிழமை விசாரணை!!

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மீது பா.ஜனதா தலைவர் சுப்பிரமணியசாமி தொடர்ந்த நேஷனல் ஹெரால்டு வழக்கு டெல்லி கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் ராகுல் காந்தி உள்ளிட்டோருக்கு கடந்த 2015-ம் ஆண்டு டிசம்பர் 19-ந்தேதி ஜாமீன் வழங்கப்பட்டது.
இதற்கிடையே அவதூறு வழக்கில் தண்டனை பெற்றதால் ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டது. இதையடுத்து தனது ராஜதந்திர பாஸ்போர்ட்டை ஒப்படைத்துள்ள அவர் புதிதாக சாதாரண பாஸ்போர்ட் பெற தடையில்லா சான்றிதழ் வழங்குமாறு டெல்லி கோர்ட்டில் நேற்று மனு தாக்கல் செய்தார். இது தொடர்பாக சுப்பிரமணியசாமி பதில் மனு தாக்கல் செய்ய கோர்ட்டு உத்தரவிட்டு இன்று விசாரணை நடைபெறும் என்று தெரிவித்து இருந்தது. ராகுல் காந்தியின் இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. வருகிற 26-ந்தேதி (வெள்ளிக்கிழமை) விசாரணை நடைபெறும் என்று கோர்ட்டு தெரிவித்தது.