;
Athirady Tamil News

எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் !!

0

சமூக வலைதளங்களில் கொரோனா வைரஸ் திட்டம் குறித்து ஊடக அறிக்கைகள் வெளியிடப்படுகின்றன. போராட்டம் தொடங்கும் முன்பே இது போன்ற கதைகள் பேசப்பட்டது.

இது மக்களை ஒன்று திரட்டுவதற்காக செய்யப்படுகிறது. இதன் பின்னணியில்
தொழிற்சங்கங்களும் உள்ளன என்பதால் பொலிஸார் இதில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க
வேண்டும் என்று நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க
தெரிவித்தார்;.

கம்பஹா மாவட்ட அலுவலகத்தில் புதன்கிழமை (24) இடம்பெற்ற கம்பஹா மாவட்ட
ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் மேற்குறிப்பிட்ட
விடயத்தைத் தெரிவித்த அமைச்சர் மேலும் கூறியதாவது:

“டெங்குவை கட்டுப்படுத்துவதே உள்ளூராட்சி நிர்வாகத்தின் முக்கிய பணி. அதற்கு உங்கள்
திட்டங்களை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரிடம் கொடுங்கள். அப்போது பொது
சுகாதார பரிசோதகர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும்.

குறிப்பாக தமது கடமைகளில் எரிபொருள் நெருக்கடியை எதிர்கொள்வதாக பலர் என்னிடம்
தெரிவித்தனர். சுகாதார அதிகாரிகளின் கடமைகளுக்கு எரிபொருள் வழங்குவதற்கு வரம்பு
இல்லை. திட்டங்களை கொடுத்தால், அந்த பிரச்சினைகளை தீர்க்க முடியும். மேலும், டெங்கு
தடுப்பு பணியில் ஈடுபடும் அதிகாரிகளை, வேறு பணிகளுக்கு பயன்படுத்த வேண்டாம்.

சில அரச அதிகாரிகள் முந்தைய ஒருங்கிணைப்புக் குழுவிடம் அளித்த அறிக்கையையே தற்போதும்
சமர்ப்பித்து வருகின்றனர். எங்களுக்கு முறையான அறிக்கைகளை கொடுங்கள். அப்போது
பிரச்சினைகளை தீர்த்து வேலை செய்யலாம்.

டெங்கு கட்டுப்பாட்டு பணியை தனியாக செய்வது கடினம். ஜனாதிபதி கிராம குழுக்களை
அமைத்துள்ளார். அந்த குழுக்களில் கிராம உத்தியோகத்தர்கள் உட்பட அரச உத்தியோகத்தர்கள்
உள்ளனர். தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் உள்ளன. அவற்றுடன் பொது சுகாதார
பரிசோதகரை இணைக்கவும்.

அப்போது இந்த டெங்கு கட்டுப்பாட்டு பணியை நாம் செய்வது இலகுவாக இருக்கும். ஒரே ஒரு
அதிகாரி தான் இந்த வேலையை செய்ய வேண்டும் என்றால் அது கடினம். அதுபோல மக்களையும்
தொடர்பு கொள்ளுங்கள். மக்கள் பங்கேற்காமல் வேலை செய்யும் போது, குற்றச்சாட்டுகள் வரும்.

மேலும், கொரோனா வைரஸ் திட்டம் குறித்து ஊடக அறிக்கைகள் வெளியிடப்படுகின்றன. சமூக
வலைதளங்களில் வெளியிடுவதைப் பார்த்து நாமும் பயப்படுகிறோம். இதைப் பற்றி மருத்துவர்கள்
ஒரு கதை சொல்கிறார்கள். போராட்டம் தொடங்கும் முன்பே இது போன்ற கதைகள் பேசப்பட்டது.
இது மக்களை ஒன்று திரட்டுவதற்காக செய்யப்படுகிறது.

இதன் பின்னணியில் தொழிற்சங்கங்களும் உள்ளன. எனவே, பொலிஸார் இதில் மிகுந்த
எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். மேலும், இந்த சுகாதார நிலைகள் குறித்து, நாட்டின் சுகாதார
துறைக்கு தெரியப்படுத்துங்கள். இல்லையெனில், மக்கள் அச்சமடையாத பிரச்சினைகள் ஏற்படும்”
என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.