;
Athirady Tamil News

முடியுதிர்வை தடுக்க என்ன செய்யலாம்? !! (மருத்துவம்)

0

முடியுதிர்வை தடுப்பதற்கு முதலில் முடிக்கு பயன்படுத்தும் தண்ணீரில் கவனம் செலுத்த வேண்டும். வெந்நீர் முடி வளர்ச்சிக்கு உகந்தது அல்ல. உச்சி வெயிலில் வெதுவெதுப்பான நீரில் குளிப்பதை முற்றிலும் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

நாம் தேர்ந்தெடுக்கும் ஷாம்பு, இரசாயனம் கலந்த ஷாம்பு, கூந்தல் வளர்ச்சிக்கு எவ்விதத்திலும் நன்மை தராது. எனவே இரசாயனம் இல்லாத இயற்கையான முறையிலுள்ள சீயக்காய், கற்றாழை, செம்பருத்தி, வெந்தயன் இவற்றை உபயோகிக்க முயற்சி செய்வது எவ்வித பக்க விளைவுகள் இல்லாமல் உடலை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கும்.

தலை முடியை உலர்த்துவதற்கு ஹேர் ட்ரயிர் போன்றவற்றை பயன்படுத்தக்கூடாது. மெல்லிய துணியை கொண்டு மெதுவாக துவட்டவேண்டும். எக்காரணத்தை கொண்டும் மின்சாதனங்களை உபயோக்கிக்கக்கூடாது.

ஈரமான முடியை முறுக்கவோ, இறுக்கமாக கட்டவோ கூடாது. இதனால் தலைமுடி உடைந்துவிடும். நம் முன்னோர்கள் பயன்படுத்திய முறைப்படி எண்ணெய் தேய்த்து குளிப்பதை வழக்கமாக வைத்துக் கொள்ளவேண்டும்.

அதிக வெயில், அதிக தூசி இரண்டுமே தலை முடி வளர்ச்சியை பாதிப்பவையாகும். எனவே கூடுமான வரை தவிர்ப்பது நல்லது. தூக்கம் மிக மிக முக்கியம். ஆழ்ந்த தூக்கம் அளவான சத்துள்ள உணவு இவை இரண்டும் கூந்தல் வளர்ச்சிக்கு இன்றியமையாதது. மெல்லிய பருத்தியிலான தலையணை உறை போன்றவற்றை பயன்படுத்த வேண்டும்.

மலசிக்கல், அஜீரணம் போன்றவை ஏற்படாமல் உடலை சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் வைத்து கொள்ள வேண்டும். ஈர தலையில் எண்ணெய் தேய்ப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

இரவு நேரங்களில் எண்ணெயை மிதமாக சூடு செய்து கூந்தலின் மயிர் கால்களில் மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும். சிறிதளவு அடி பாதங்களில் தேய்க்க ஆழ்ந்த துக்கம் வரும். இதை அனைவரும் முயற்சி செய்யலாம். நல்ல பலன் கிடைக்கும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.