August 2014
M T W T F S S
« Jul    
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
 
 
 

இந்தியாவின் தீர்மானம் வரவேற்கத்தக்கது…!!! தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன்

 
Print Friendly

அமெரிக்காவின் ஜெனீவாப் பிரேரணையை ஆதரிப்பதற்கு இந்தியா எடுத்த தீர்மானத்தை வரவேற்பதாகவும், இதற்கு தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளே உந்துசக்தியாக அமைந்ததாகவும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அரசாங்கம் நிறைவேற்றினால் சர்வதேசத்தின் நேரடித் தலையீடுகளுக்கு இடமே இருக்காது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழர் பிரச்சினைத் தீர்வு தொடர்பாக இலங்கை இந்தியாவிடம் பல்வேறு உறுதிமொழிகளை வழங்கியது. ஆனால் எதுவுமே நிறைவேற்றப்படவில்லை. இவ்வாறானதோர் சூழ்நிலையிலேயே அமெரிக்கா ஜெனீவாவில் பிரேரணையை முன்வைத்தது. அத்தோடு நல்லிணக்க ஆணைக்குழுவை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவே நிறுவியதோடு, பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அறிவித்தார். அதனை நிறைவேற்றுமாறே பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கும் இப்பிரேரணை தமிழ் மக்கள் சுயமரியாதையுடன் உரிமைகளோடு வாழ வேண்டும் என்பதையே வலியுறுத்துவதாகவும் தெரிவித்துள்ளார். இவ்வாறான நிலைப்பாட்டை இந்தியா மேற்கொள்வதற்கு தமிழ்நாட்டு காங்கிரஸ் உட்பட திராவிட கட்சிகள் முக்கிய பங்களிப்பையும், அழுத்தத்தையும் கொடுத்தன. இவர்களின் தீவிரமான போராட்டம் வெற்றி பெற்றுள்ளது. இனி இலங்கை அரசாங்கத்தின் பக்கத்திலேயே பந்து உள்ளது. எனவே, பரிந்துரைகளை நிறைவேற்றி தமிழ் மக்களின் நம்பிக்கையை பெற்றுக்கொண்டு சர்வதேசத்தின் நேரடியான தலையீடுகளை இலங்கை அரசாங்கத்தால் தவிர்த்துக்கொள்ள முடியும் என தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் மேலும் தெரிவித்துள்ளார்.

 

 
 

Tags

Related Posts

  • No Related Posts
 
 

0 Comments

You can be the first one to leave a comment.

 
 

Leave a Comment

 




 
 
 
 

Athirady News Search

அதிரடி இணையத்தில் வெளியாகும் செய்திகளில் நீங்கள் விரும்பும் செய்திகளை உடன் பார்க்கும் வகையில் நீங்கள் தேடும் (SEARCH) செய்திகளின் தலைப்பை இங்கு குறிப்பிட்டு (உதாரணமாக "புலிகள்" என்று குறிப்பிட்டு) எழுதினால் அதுகுறித்த செய்திகளை உடன் பார்வையிடலாம். நன்றி!!

 

Never miss any News | Newsletter

Be the first to know when we add new news! Enter your email address below and subscribe. It's 100% free!

 

Enter your email address: