6 January 2017 0 Comments Report

பெட்ரோல் பங்க் மீது வெடி வீசிய இளைஞர்கள்: அதிர்ச்சி வீடியோ..!!

625-117-560-350-160-300-053-800-210-160-90-8மெக்ஸிக்கோவில் இளைஞர்கள் குழு ஒன்று வெடியை கொளுத்தி பெட்ரோல் பங்க் மீது வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Apodaca நகரத்தில் உள்ள் பெட்ரோல் பங்க் மீதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் இந்த நிகழ்வை வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டுள்ளனர்.

மெக்ஸிக்கோவில் பெட்ரோல் விலை உயர்வு காரணமாக தொடர் போராட்டம் நடைபெற்று வரும் சூழ்நிலையில், தற்போது, இந்த வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது.

குறித்த வீடியோவில், இளைஞர் ஒருவன் ஒரு கையில் மதுவை பிடித்துக்கொண்டு மற்றொரு கையில் பெரிய வெடியை வைத்துள்ளார்.

இதை அருகிலிருந்த பெண் ஒருவர் பதிவு செய்கிறார். பின்னர், பெண் வெடியை கொளுத்த இளைஞன் பெட்ரோல் விலை உயர்வுக்கு டிரம்பை திட்டிய படி வெடியை அருகில் உள்ள பெட்ரோல் பங்க் மீது வீசிகிறார்.

அதிர்ஷ்டவசமாக வெடி பெட்ரோல் டங்க் மீது விழாமல் அருகே விழுந்து வெடிக்கிறது. இதனால், பெட்ரோல் பங்கிற்கு எந்த பாதிப்பும் எற்படவில்லை என கூறப்படுகிறது.


Post a Comment

*