8 January 2017 0 Comments Report

கிளிநொச்சி சிவநகா் கிராமத்தில் சனசமூக நிலையம் திறப்பு..!! (படங்கள் & வீடியோ)

dsc02708கிளிநொச்சி சிவநகா் கிராமத்தில் சனசமூக நிலையம் இன்று ஞாயிற்றுக் கிழமை திறந்த வைக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவா் கஜேந்திரகுமாா் பொன்னம்பலம் முதன்மை விருந்தினராக கலந்துகொண்டு 08-01-2017 ஞாயிறு பிற்பகல் மூன்று மணிக்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது. குறித்த சனசமூக நிலையம் ஏழு இலட்சம் ரூபா செலவில் அமைக்கப்பட்டுள்ளது

ஆனால் நேற்றைய (07-01-2017) தினம் இரவு சிவநகா் கிராமத்தைச் சோ்ந்த இளைஞா்கள் சிலா் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் ஏற்பாட்டில் கஜேந்திரகுமாா் பொன்னம்பலத்தின் வருகைக்கு எதிராக தமிழத்தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் கரைச்சி பிரதேச சபை தவிசாளா் நா.வை.குகராசாவின் முழு நிதி பங்களிப்பில் அமைக்கப்பட்டு சிவநகா் சனசமூக திறந்து வைக்கப்பட்டுள்ளது எனவும் சிவநகா் மக்கள் நன்றியுள்ள மக்கள் எனவும் போஸ்டா்கள் குறித்த பிரதேசமெங்கும் 07-01-2017 இரவு ஒட்டியிருப்பதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளார்கள் தெரிவித்துள்ளனா்.

சிவநகா் மூத்த பிரஜைகள் சங்க தலைவா் இ.ரகுபதி தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் கிராம அலுவலா் மற்றும் ஆசிரியா்கள் கரைச்சி பிரதேச சபையின் நூலகா் பொதுமக்கள் என பலா் கலந்துகொண்டனா்.

“.அதிரடி” இணையத்தின் கிளிநொச்சி செய்தியாளர் கிளியூர் சேரன்

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்…

dsc02680

dsc02684

dsc02689

dsc02690

dsc02691

dsc02696

dsc02702

dsc02703

dsc02704

dsc02706


Post a Comment

*