11 January 2017 0 Comments Report

ஹிட்லரை போல் மோடி நடந்து கொள்கிறார்: கர்நாடக காங்கிரஸ் தலைவர் குற்றச்சாட்டு..!!

201701111204420631_modi-behaving-like-hitler-karnataka-congress-leader_secvpfபெங்களூரு டவுன்ஹால் முன்பு உயர் மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் தடை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து காங்கிரஸ் சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கர்நாடக காங்கிரஸ் தலைவரும், உள்துறை மந்திரியுமான பரமேஸ்வர் கலந்து கொண்டு பேசியதாவது:-

சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, உயர் மதிப்பிலான ரூபாய் நோட்டுகளை தடை செய்ததன் மூலம் ஏழை, நடுத்தர, தொழிலாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதன்மூலம், பல கோடி மக்கள் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். பிரதமர் மோடியின் திடீர் முடிவால் நாடே பிரச்னையில் சிக்கி தவித்து வருகிறது. ஹிட்லரை போல மோடியும் நடந்து கொள்கிறார்.

உயர் மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் தடை செய்ததால் மோசமான பொருளாதாரத்தை நம் நாடு சந்தித்து வருகிறது. இதுவரை பிரதமர் மோடி எடுத்த முடிவுகளில் மோசமானது என்று இதனை குறிப்பிடலாம்.

மோடியின் நடவடிக்கையைக் கண்டித்து நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும். இதுகுறித்து இன்று டெல்லியில் ராகுல் காந்தியின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

அதன் பிறகு மாநிலத்தில் பரவலாக போராட்டம் நடத்தப்படும். 65 நாட்களாகியும் வங்கிகளில் பணம் எடுப்பதில் மக்களுக்குத் தொடர்ந்து பிரச்னை ஏற்பட்டு வருகிறது. இதனால், வங்கிகளில் ஊழல் நடைபெற்று வருகிறது. இதற்கு பொறுப்பேற்று பிரதமர் மோடி பதவி விலக வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.


Post a Comment

*