11 January 2017 0 Comments Report

குஜராத்தில் புதிய 2000 ரூபாய் நோட்டு டிசைனில் சேலைகள்..!!

201701111110309028_saree-with-print-of-the-newly-introduced-pinkcoloured-rs_secvpfஇந்தியாவில் ஜவுளி உற்பத்தியில் குஜராத் மாநிலம் சூரத் நகரானது முக்கிய பங்கு வகிக்கிறது. இங்கு தயாரிக்கப்படும் துணி வகைகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

இந்நிலையில், நாடு முழுவதும் மத்திய அரசால் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட 2000 ரூபாய் நோட்டு டிசைன் அச்சிடப்பட்ட இளஞ்சிவப்பு நிற சேலையை சூரத்தைச் சேர்ந்த ஒரு நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்த சேலையில் 504 ரூபாய் நோட்டுகள் அச்சிடப்பட்டிருக்கின்றன. கடைகளில் விற்பனைக்கு வந்துள்ள இந்த சேலைகளுக்கு அதிக வரவேற்பு உள்ளது.

வாடிக்கையாளர்களை இந்த டிசைன் சேலைகள் பெரிதும் கவர்வதாக விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக உத்தர பிரதேசம், மணிப்பூர், பஞ்சாப், கோவா மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களில் அதிக வரவேற்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


Post a Comment

*