11 January 2017 0 Comments Report

ஐக்கிய அரபு நாடுகளில் சிங்கம், புலி, சிறுத்தையை செல்லப் பிராணியாக வளர்க்க தடை..!!

201701111102484267_united-arab-emirates-bans-wild-animals-as-pets_secvpfஐக்கிய அரபு நாடுகளில் சிங்கம், புலி மற்றும் சிறுத்தையை செல்லப் பிராணியாக வளர்க்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. மீறினால் ரூ.93 லட்சம் அபராதம் விதிக்கப்படும்.

ஐக்கிய அரபு நாடுகளில் வாழும் செல்வந்தர்கள் சிங்கம், புலி, மற்றும் சிறுத்தைகளை தங்கள் வீடுகளில் செல்லப் பிராணிகளாக வளர்த்து வருகின்றனர்.

அவற்றை நாய்கள் போன்று தெருக்களிலும், கடற்கரையிலும் அவற்றை கையில் பிடித்தபடி நடைபயிற்சி மேற்கொள்கின்றனர். அத்தகைய போட்டோக்களை சமூக வளைதளங்களிலும், இன்ஸ்டாகிராமிலும் பிரசுரித்து வருகின்றனர்.

துபாய் நாட்டின் பட்டத்து இளவரசர் ஹம்தன் பின் முகமது அல் மக்தூம் இன்ஸ்டாகிராமில் தான் சிங்கத்துடன் இருக்கும் பல்வேறு போட்டோக்களை பதிவு செய்துள்ளார்.

இன்னும் சிலரோ தங்களது ஆடம்பர கார்களின் முன்புறம் கூண்டுகளில் சிறுத்தைப்புலிகளை அடைத்துக்கொண்டு காட்சிபொருளாக வலம் வருகிறார்கள். இவை அனைத்தும் இயற்கை சூழ்நிலையில் வனப் பகுதிகளில் வாழும் மிருகங்களை பிடித்து வந்து சட்ட விரோதமாக கடத்தி வரப்பட்டு ஐக்கிய அரபு நாடுகளில் விற்பனை செய்யப்பட்டவையாகும்.

எனவே, ஐக்கிய அரபு நாடுகளில் வன விலங்குகளை செல்லப்பிராணி ஆக வளர்ப்பதை தடை செய்ய வேண்டும் என மிருக நல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

அதை ஏற்று வன விலங்குகளான சிங்கம், புலி, சிறுத்தையை செல்ல பிராணிகளாக வளர்க்க தடை விதித்து சட்டம் இயற்றப்பட்டுள்ளது. மீறி வளர்ப்பவர்களுக்கு ரூ.93 லட்சம் அதாவது 1 லட்சத்து 36 ஆயிரம் அமெரிக்க டாலர், (7 லட்சம் தினார்) அபராதம் அல்லது ஜெயில் தண்டனை விதிக்கப்படும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் வீடுகளில் வளர்க்கப்படும் வன விலங்குகளை அபுதாபி வன விலங்குகள் மையத்தில் ஒப்படைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Post a Comment

*