11 January 2017 0 Comments Report

கல்வி அமைச்சின் சுற்றுநிருபத்தை அதிபர்கள் மீற வேண்டாமென தெரிவிப்பு..!!

akilavirajகல்வி அமைச்சின் சுற்று நிருபத்தை மீறி எந்த காரணமும் கொண்டும் முதலாம் ஆண்டிற்கான அனுமதியை அதிபர்கள் வழங்கமுடியாது. அதேபோல பாடசாலைகளில் மாணவர்கள் அனுமதியில் பழைய மாணவர்கள் சங்கம் ஆதிக்கம் செலு த்துவதற்கு சந்தர்ப்பம் வழங்க முடியாது என கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

2017 ஆம் ஆண்டு முதலாம் ஆண்டிற்கான மாணவர்களை பாடசாலைகளுக்கு உள்வாங்கும் தேசிய நிகழ்வு இன்று (11.01.2017) கொழும்பு கிரிபத்கொட விஹார மஹா தேவி மகளிர் வித்தியாலயத்தில் நடைபெற்றது.

இந்தநிகழ்வில் அதிதியாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம், கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதா கிருஸ்ணன், பிரதேச அபிவிருத்தி அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ஆகியோர் கலந்து கொண்டனர்.

அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம்,

நாங்கள் கல்வி அமைச்சு என்ற வகையில் எங்களுடைய கடமைகளை நேர்மையாக முன்னெடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றோம். நாம் எதிர்கால எமது சந்திகளின் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு சில முக்கியமான தீர்மா னங்களை எடுக்க வேண்டியுள்ளதையும் நான் சுட்டிக் காட்ட விரும்புகின்றேன் எனத் தெரிவித்தார்.

இங்கு கருத்து தெரிவித்த கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன்,

பெற்றோர்கள் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பியவுடன் தமது கடமை முடிந்துவிட்டதாக நினைக்க வேண்டாம். ஏனெ ன்றால் ஒரு பிள்ளையின் கல்வியில் பெற்றோரின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. பெற்றோர்கள், பாடசாலை ஆசி ரியர்கள், இந்த சமூகம் இவை அனைத்தும் இணைந்தே ஒரு நல்ல மாணவனை உருவாக்க முடியும்.

இன்று அரசாங்கம் எதிர்பார்க்கின்ற நல்லாட்சி அல்லது இனங்களுக்கு இடையிலான சகோதரத்துவத்தை சரியாக முன்னெ டுப்பதற்கான இடம் பாடசாலையே. சிறுவர்களிடம் வேற்றுமை கிடையாது.

அவர்கள் இன ரீதியாக மத ரீதியாக வேறுபடுவது இல்லை. ஒரு பாடசாலையை எடுத்துக் கொண்டால் அங்கே எல்லா மாணவர்களும் ஒரே நிற உடையுடன் எல்லோரும் சமமானவர்கள் என்ற அடிப்படையில் பழகுகின்றார்கள்.

எனவே பாடசாலைகள் மூலமாகவே சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்த முடியும் என நான் எதிர்பார்க்கி ன்றேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்று நாடு பூராகவும் கல்வி அமைச்சின் ஊடாக இலவச கல்வியை பெற்றுக் கொள்வதற்கு (மூன்று இலட்சத்து ஜம்ப தாயிரம்) 350,000 மாணவர்கள் தரம் ஒன்றிற்கு உள்வாங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Post a Comment