20 March 2017 0 Comments Report

வவுனியாவில் பெரும் களஞ்சியசாலை உடைத்து பணம் கொள்ளையிடப்பட்டது..!! (படங்கள்)

வவுனியா பொதிமண்டப (குட்சைட் றோட்) வீதியிலுள்ள களஞ்சிய சாலை நேற்று (19) இரவு உடைக்கப்பட்டு பெறுமதியான பணம்ஈ காசோலை கொள்ளையிடப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்த மேலும் தெரியவருவதாவது

சனிக்கிழமை தமது கடமைகளை நிறைவு செய்த பின்னா இரவு 8.30மணியளவில் குறித்த களஞ்சியசாலையினை மூடிவிட்டுச் சென்றுள்ளனர் பணியாளர்கள். நேற்று ஞாயிற்றுக்கிமை விடுமுறை என்பதால் களஞ்சியசாலையில் பணிகள் எதுவும் இடம்பெறவில்லை. இன்று (20.03.2017) காலை 7.30மணியளவில் களஞ்சியசாலையினை திறந்பதற்குச் சென்ற ஊழியர் களஞ்சியசாலை உடைக்கப்பட்டு திருட்டு போயுள்ளது தெரியவந்துள்ளது.

இதையடுத்து களஞ்சியசாலை உரிமையாளரூடாக வவுனியா பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்ட சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். குறித்த களஞ்சியசாலையிலிருந்து வட்டவல தேயிலை பால் பைக்கற் போன்றவற்றை வியாபார நிலையங்களுக்கு விநியோகம் செய்து வரும் களஞ்சியசாலை. குறித்த நேற்று இரவே உடைக்கப்பட்டுள்ளதாகவும், களஞ்சியசாலையிலிருந்து 43ஆயிரம் முதல் 45ஆயரம் ரூபா வரையான பணம், காசோலை இருந்துள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Post a Comment

*