20 March 2017 0 Comments Report

வவுனியா தாண்டிக்குளம் பிரமண்டு வித்தியாலய வளாகத்தில் துப்பாக்கி ரவைகள் மீட்பு..!! (படங்கள்)

வவுனியா தாண்டிக்குளம் பிரமண்டு வித்தியாலய வளாகத்தில் குண்டுகள் காணப்படுவதாக கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் விசேட அதிரடிப்படையினர் நிலத்திணை ஆழப்படுத்திபோது பயன்படுத்த முடியாத துப்பாக்கி ரவைகளும் வெடித்த குண்டின் பகுதிகள் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இப் பாடசாலை யுத்த காலத்தில் இராணுவத்தின் பிரதான இராணுவ முகாமாக செயற்பட்டிருந்த நிலையில் 2000 ஆம் ஆண்டளவில் விடுதலைப்புலிகளினால் இராணுவதினர் மீது செய் அல்லது செத்துமடி தாக்குதலின் போது இப்பகுதியில் இருந்து இராணுவம் வெளியேறியிருந்தது.

இந் நிலையில் இப்பகுதியில் பாடசாலை ஆரம்பித:து பல ஆண்டு காலமாக செயற்பட்டு வரும் நிலையில் வகுப்பறைகளுக்கு முன்பாக அலங்கார வேலைகள் செய்வதற்காக நிலத்திணை வெட்டியபோதே பாரிய அளவிலான துப்பாக்கி ரவை கண்டெடுக்கப்பட்டிருந்தது.

இதனையடுத:து பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதனையடுத்து குண்டு செயழிலக்கச்செய்யும் விசேட அதிரடிப்படையினர் வரவழைக்கப்பட்டு நிலத்தினை ஆழப்படுத்திபேது அதனுள் இருந்து மேலுமொரு துப்பாக்கி ரவையும் வெடித்த குண்டுகளின் பகுதிகளும் காணப்பட்டன.

இதனையடுத்து குண்டு தேடும் பணி நிறுத்தப்பட்டுள்ளது.


Post a Comment

*