20 March 2017 0 Comments Report

ஆசிரியரின் இடமாற்றத்தை எதிர்த்து லிந்துலையில் ஆர்ப்பாட்டம்..!! (படங்கள் இணைப்பு)

லிந்துலை பம்பரக்கலை விவேகலையா பாடசாலையின் ஆசிரியரை இடமாற்றம் செய்ய வேண்டாம் என்று கோரி பெற்றோர் மற்றும் மாணவர்களால் இன்று (திங்கட்கிழமை) ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

மேற்படி பாடசாலையின் தமிழ் பாட ஆசிரியரையே இடமாற்றம் செய்ய வேண்டாமென மாணவர்களும், பெற்றோர்களும் பாடசாலை முன்றலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இப் போராட்டத்தினால் மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டதுடன், உரிய தீர்வு கிடைக்கும் வரை போராடுவோம் எனவும் தெரிவித்தனர்.

அண்மையில் கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்ட சுற்று நிரூபத்தின்படி பாடசாலை மாணவர்களை மேற்படி போராட்டங்களுக்கு பயன்படுத்த முடியாதென அறிவுறுத்தப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.


Post a Comment

*