20 March 2017 0 Comments Report

உரிய பதில் கிடைக்கும் வரை போராட்டத்தை கைவிடப்போவதில்லை என வேலையற்ற பட்டதாரிகள் தெரிவிப்பு..!!

வடக்கு கிழக்கு மாகாணங்களில் வேலையற்ற பட்டதாரிகளின் கோரிக்கைக்கு தீர்வு கிடைக்காத நிலையில் அவர்களின் போராட்டமும் தொடர்கின்றது.

28 நாட்களாக தமக்கான வேலைவாய்ப்பினை வழங்கக் கோரி மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சத்தியாக்கிரகப் போராட்த்தினை முன்னெடுத்துவருகின்றனர்.

உரிய பதில் கிடைக்கும் வரை போராட்டத்தை கைவிடப்போவதில்லை என 22 நாட்களாக சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் தெரிவித்துள்ளனர்.

யாழ். மாவட்ட செயலகத்திற்கு முன்பாக 22 ஆவது நாளாகவும் வடமாகாண வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.


Post a Comment

*