20 March 2017 0 Comments Report

திருமகோணமலை வளாக மாணவர்களை பல்கலைக்கழக வளாகத்திலிருந்து வெளியேறுமாறு அறிவித்தல்..!!

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாக மாணவர்களை பல்கலைக்கழக வாளாகத்திலிருந்து வெளியெறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாணவர்களால் இன்று முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு நடவடிக்கையின் போது ஏற்பட்ட துரதிஷ்டவசமான சம்பவங்களை அடுத்து இன்று பிற்பகல் கூடிய வளாக சபை இதற்கான தீர்மானத்தை எடுத்ததாக கிழக்குப் பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாக முதல்வர் டொக்டர் வி.கணகசிங்கம் தெரிவித்தார்.

வகுப்புத் தடை விதிக்கப்பட்ட 16 மாணவர்கள் பரீட்சையில் தோற்றுவதற்கு அனுமதி வழங்குமாறு கோரி பல்கலைக்கழக மாணவர்கள் இன்று எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

சில மாணவர்கள் இன்றைய பரீட்சையில் தோற்றவிருந்த நிலையில் அவர்களுக்கும் இடையூறு விளைவிக்கப்பட்டது.

மாணவர்களின் எதிர்ப்பு நடவடிக்கையை கருத்திற்கொண்டு பரீட்சைகள் யாவும் மறு அறிவித்தல் வரை ஒத்திவைக்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து இன்று பிற்பகல் அவசரமாக கூடிய கிழக்குப் பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாக சபை மாணவர்களுக்கான கல்வி செயற்பாடுகளை நிறுத்துவதற்கு தீர்மானித்தது.

இதற்கமைய விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்களையும் பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து வெளியேற்றுவதற்கான அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.


Post a Comment

*