20 March 2017 0 Comments Report

பூணாவ பகுதியில் இடம்பெற்ற விபத்து- சாரதி உடல் நசிந்து பலி..!! (அதிர்ச்சிப் படங்கள்)

பூணாவ பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் சாரதி பலியானார். ரம்பாவ பகுதியிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த பட்டா ரக வாகனமொன்று மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் பட்டாவின் சாரதி ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளார்.

கல்குனாமடு பிரதேசத்தை சேர்ந்த 32 வயதுடைய தாரக்க என்பவரே பலியான சாரதி என அறியப்படுகிறது.

மேலும் இவ்விபத்தானது சாரதி நித்திரை மயக்கத்தில் மரத்துடன் மோதியிருக்கலாம் என சம்பவ இடத்தில் நின்றவர்கள் தெரிவிக்கின்றனர். மேலதிக விசாரணைகளை மதவாச்சி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.


Post a Comment

*