21 March 2017 0 Comments Report

இந்திய மீனவர்கள் 10 பேர்கள் நெடுந்தீவு கடற்பரப்பில் கைது..!!

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுப்பட்டுவந்த இந்திய மீனவர்கள் 10 பேர்கள் நேற்று இரவு 10.30 நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

இவர்களை இன்றைய தினம் யாழ் நீரியல்வளத்திணைக்க அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.

இவர்கள் இராமேஸ்வரம்,புதுக்கோட்டை,ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் என்று கடற்படையினர் தெரிவிக்கின்றனர்.இவர்கள் இரண்டு படகுகள் மற்றும் எனைய மீன்பிடி உபகரணங்கள் என்பவற்றை பரிமுதல் செய்யப்பட்டுள்ளது. கூறித்த நபர்களை இன்றைய தினம் ஊர்காவற்துறை நீதிமன்றத்;திற்கு இவர்களை கொண்டு செல்லப்படும் என்று யாழ் நீரியல் வளத்திணைக்கள உதவிப்பணிப்பாளர் J.சுதாகர் தெரிவித்தார்.


Post a Comment

*