21 March 2017 0 Comments Report

இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் 153 ஆவது பொலிஸ் வீரர் தின நிகழ்வுகள்..!! (படங்கள்)

இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் 153 ஆவது பொலிஸ் வீரர் தின நிகழ்வுகள் இன்று யாழ் பொலிஸ் நிலையத்தில் யாழ் மாவட்ட உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் ஆர்.ஏச். அம்பியபிட்டிய தலைமையில் இவ் வீரர்கள் தினம் நினைவுகூறப்பட்டது..

இதில் கடந்த காலத்தில் உயிர்நீத்த பொலிஸ் அதிகாரிகள்,உத்தியோகத்தர்கள் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டன..இங்கு உயிர்நீத்த பொலிஸ் அதிகாரிகள்,உத்தியோகத்தர்கள் ஆகியோர்களின் உறவினர்களால் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.

கூறிப்பாக இங்கு கலந்து கொண்டு உரையாற்றிய யாழ் மாவட்ட உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் ஆர்.ஏச். அம்பியபிட்டிய கடந்த காலத்தில் யாழ் மாவட்டத்தில் 3010 பேர்கள் பொஸிஸ் அதிகாரிகள்,மற்றும் உத்தியோகத்தர்கள் உயிர் இழந்துள்ளனர்.அவை அனைத்தும் 30 வருடகாலத்திலே நடைபெற்றது.என்று அவர் தெரிவித்தார்.

இதில் யாழ் பொலிஸ் நிலையத்தின் உதவி பொலிஸ் பரிசோதகர்கள்,மற்றும் அதிகாரிகள்,உத்தியோகர்கள்,மக்கள் பலரும் கலந்து கொண்டனர்.


Post a Comment

*