21 March 2017 0 Comments Report

யுத்தகாலத்தில் வடக்கு கிழக்கில் 2540 பொலிசார் உயிரிழந்துள்ளனர் -பிரதி பொலிஸ் மா அதிபர்..!! (படங்கள்)

வவுனியாவில் நடைபெற்ற பொலிஸ் வீரர்கள் நிகழ்வில் கலந்துகொண்டு உரை நிகழ்த்துகையிலேயே பிரதிபொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நாடளாவிய ரீதியில் அனுஸ்டிக்கப்படும் 153 வது பொலிஸ் வீரர்கள் தினம் இன்று (21-03) வவுனியா பொலிஸ் தலைமையகத்தில் அமைந்துள்ள பொலிஸ் வீரர்கள் நினைவுத் துர்பிக்கு எதிரில் அனுஸ்டிக்கப்பட்டது.
வன்னி பிரதிபொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தலைமையில் நிகழ்வுகள் நடைபெற்றது.

யுத்தகாலத்தின்போது வடக்கு கிழக்கில் உயிரிழந்த 2540 பொலிசார் உட்பட இன்று வரையில் கடமையில் இருக்கும்பொது உயிரிழந்த 3111 பொலிஸ் வீரர்கள் நினைவாக வவுனியாவில் அமைந்துள்ள நினைவுத்தூபிக்கு முன்பாக உயிர் நீத்த பொலிசாருக்கு அஞ்சலி செலுத்தி அவர்களது சேவைகளும் நினைவு கூரப்பட்டது.

பொலிஸ் நினைவுத்தூபிக்கு விசேட பொலிஸ் மரியாதை அணிவகுப்பு நடத்தப்பட்டதுடன் அதன் பின்னர் உயிர் நீத்த பொலிசாரின் உறவுகள் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் மலரஞ்சலி செலுத்தி உயிர்நீத்த பொலிஸ் உத்தியோகத்தர்களை நினைவு கூர்ந்தனர்.


Post a Comment

*